வறுத்த பருப்பு குழம்பு

தேதி: December 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வாணி ரமேஷ் அவர்களின் வறுத்த பருப்பு குழம்பு குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய வாணி ரமேஷ் அவர்களுக்கு நன்றிகள்.

 

துவரம் பருப்பு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் - 4
தனியா - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பற்கள்
கறிவேப்பிலை - 10 இலைகள்
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவைப் போட்டு வறுக்கவும்.
அத்துடன் துவரம் பருப்பைச் சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதக்கிய கலவையுடன் உப்பு சேர்த்து, 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்த கலவையைக் குக்கரில் மாற்றி வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் எடுத்துக் கடைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, பருப்புக் கலவையில் சேர்க்கவும்.
சுவையான வறுத்த பருப்பு குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுமி சூப்பர்ம்மாாா... கலக்கல்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரொம்ப‌ நன்றி ரேவா...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சூப்பர். என் அன்பு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப‌ நன்றி இமாம்மா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நல்ல மணமா இருக்கும் இல்லையா? சூப்பர்பா

அன்புத் தோழிக்கு அன்பான வாழ்த்துக்கள் கலக்குங்க தொடர்ந்து :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப‌ தேங்ஸ் சுவா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நான் நேற்றே நினைச்சேன் நீங்க‌ தான். கிச்சன் குயின் என்று அது கரெக்ட். கலக்குங்க‌. வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள். கலந்து கொண்டு குறிப்புகள் கொடுத்த‌ எல்லா தோழிகளும் அறுசுவையின் கிச்சன் குயின் தான் மீனா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அருமையாக‌ செய்து காட்டியிருக்கீங்க‌. வாழ்த்துகள்!
படங்கள் பளிச்... பளிச்...
தொடர்ந்து கலக்குங்க‌:)

உங்கள் பதிவுக்கும் பாராட்டுக்கும் எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....