சீஸ் கேசடீயா

தேதி: December 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

திருமதி. நர்மதா அவர்கள் வழங்கியுள்ள சீஸ் கேசடீயா என்ற மெக்சிகன் வகை உணவு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய நர்மதா அவர்களுக்கு நன்றிகள்.

 

வீட் அல்லது கார்ன் டோர்டில்லா - 4 (Wheat / Corn tortilla)
சீஸ் கலவை - ஒரு கப் (பார்மஜான், மொற்சரில்லா, செடார்)
உப்பு - தேவையான அளவு
ஹலபீனோ ஊறுகாய் - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீஸ் கலவையை எடுத்துக் கொண்டு, அதனுடன் ஹலபீனோ ஊறுகாயைச் சேர்த்துக் கலக்கவும்.
டோர்டில்லாவை தோசைக் கல்லில் போட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.
சுட்டு எடுத்த டோர்டில்லாவின் ஒரு பாதியில் சீஸ் கலவையை பரப்பி உப்பு தூவி, மறு பாதியால் மூடவும்.
மீண்டும் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி டோர்டில்லாவைப் போட்டு இரு பக்கமும் திருப்பிப் போட்டு சீஸ் உருகும் வரை சுட்டு எடுக்கவும்.
சுவையான புளிப்பும், சீஸும் கலந்த சீஸ் கேசடீயா (Cheese Quesadilla) தயார். இதை அப்படியே சைட் டிஷ் ஏதுமின்றி சாப்பிடலாம்.

ஹலபீனோ ஊறுகாய்க்கு பதிலாக பச்சை மிளகாய் அல்லது மிளகாய் ஊறுகாய் போட்டும் செய்யலாம்.

மெக்சிகன் முறையில் ஹலபீனோ தான் பாவிப்பார்கள். ஹலபீனோ என்பது ஒரு வகை மிளகாய். மிகவும் காரமானது. மெக்சிகன் உணவில் அதிகம் பயன்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்து அசத்தலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அனைவரும் நினைத்ததே முதலில் உங்கள் குறிப்பு தான் வரும் என்று.. சமையல் ராணியாச்சே.. சூப்பர் சுமி... செம்மையா இருக்கு.. முகப்பை பார்க்கும் போது பிரகாசமா இருக்கு.. வாழ்த்துகள் சுமி.. கிக்சன் கில்லாடி சுமிக்கு ஒரு ஓஓஓஓஓ போடுங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

குறிப்புகளை வெளியிட்டு என்னை மகிழ்ச்சிகடலில் மூழ்கடிப்பது போல் பட்டமும் தந்த‌ அறுசுவைக்கு எனது மனமார்ந்த‌ நன்றிகள். இதில் நான் பங்கு பெற‌ முக்கியக் காரண்மே என் அன்பு மகள் தான். மேடமுக்கு சாபிபிட‌ பிடிக்காது..;) ஆனா சமையல் செய்வதை பார்க்க‌, டெஸ்ட் அனிமல் போல‌ கொஞ்சம் டேஸ்ட் செய்து கமெண்ட் பண்ண‌ மட்டும் ரொம்ப‌ பிடிக்கும்..:) மேலும் ஊக்கமளித்த‌ எனது அன்பு தோழிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த‌ நன்றிகள். கலந்து கொண்டு குறிப்புகளை அள்ளித் தந்துள்ள‌ எல்லாத் தோழிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப‌ நன்றி ரேவா. //சமையல் ராணியாச்சே.// எனை வெச்சு காமெடி கீமடி பண்ணலியே...;) உங்களைப் போல‌ ஊக்கமளிக்கும் தோழிகள் எனக்கு கிடைத்தது
நான் பெற்ற‌ ஒரு வரம். //முகப்பை பார்க்கும் போது பிரகாசமா இருக்கு.//.இன்று அறுசுவை முகப்பில் நான்..நாளை அறுசுவை முகப்பில் நீ (நீங்க‌)அல்லது நமது இன்னோரு தோழி.:) ..... மீண்டும் எனது நன்றிகள்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கிச்சன் குயின் ஆப் த டே சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எல்லா குறிப்புகளுமே ரொம்ப கலக்கலா இருக்கு. அறுசுவை தோழிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நானும் இந்த குறிப்புகளை பார்த்து இருக்கேன் விளக்கப்படக்கத்தோட பார்க்கும் போது செய்யனும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. படங்கள் சூப்பரா இருக்கு சுமி. எல்லா ரெசிப்பி டேஸ்ட்டும் எப்படி இருந்துச்சு பிடிச்சுதா குழந்தைங்க சாப்பிட்டாங்களா?
உங்க மகளுக்கு ரொம்ப நன்றி "தாங்ஸ் வர்ஷா" இன்னும் நிறைய குறிப்புகள் செய்து அனுப்ப என் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் சுமி. அனைத்துமே சூப்பர். நேத்து நான், ரேவ், சுவா பேசும்ப்பொது இதைதான் பேசினோம். சுமிகுறிப்புதான் பர்ஸ்ட் வரும்ன்னு. மேலும் நிறைய செய்து எங்களுக்கு போடுங்க.

Be simple be sample

//கிச்சன் குயின் ஆப் த டே சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்// ரொம்ப நன்றிங்க...:) நீங்கள் சொல்லுவவது உண்மை தான், ரெசிப்பிஸ் படத்தோட பார்க்கும் போது நமக்கு அதை செய்ய தூண்டும். //படங்கள் சூப்பரா இருக்கு சுமி.// மெய்யலுமா சொல்றீங்க..;) பாபு அண்ணா கேட்டா என்னை உதைக்க வரப் போறாரு..;)
//எல்லா ரெசிப்பி டேஸ்ட்டும் எப்படி இருந்துச்சு பிடிச்சுதா குழந்தைங்க சாப்பிட்டாங்களா?// எல்லாமே நல்லா இருந்த்துங்க.. சர்க்கரைவள்ளிகிழங்கு அடையில மட்டும் சில மாறுதல் செய்ய வேண்டி வந்தது. குட்டீஸ்க்கு ரொம்ப பிடிச்சது, அதிலும் சீஸ்கேசடியா, கேரட் ஐஸ்கிரீம் ரொம்ப பிடிச்சது..
//உங்க மகளுக்கு ரொம்ப நன்றி "தாங்ஸ் வர்ஷா"// கண்டிப்பாக சொல்லிடறேன்..
//இன்னும் நிறைய குறிப்புகள் செய்து அனுப்ப என் வாழ்த்துக்கள்.// செய்து அனுப்பாட்டா வீட்டில இருக்க முடியாதுங்க...;) மீண்டும் எனது நன்றிகள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப நன்றி ரேவ்ஸ்.//நான், ரேவ், சுவா பேசும்ப்பொது இதைதான் பேசினோம்.// அது தான் எனக்கு சாப்பிடும் போது விக்கல் வந்து இருக்கு, பய புள்ளங்க வேற நேரத்துல நம்பள பத்தி பேசக் கூடாது..;)நீங்க இங்க வாங்க ரேவ்ஸ், உங்களுக்கு என்ன வேணுமோ எல்லாமே செய்து தர்றேன்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

முதலில் 6 குறிப்புகள் அனுப்பியவர் என்ற வரிசையில் அவரது குறிப்புகள் முதலாவதாக வெளியாகியுள்ளது. இதில் வேறு எந்தத் தகுதித் தேர்வும் வைக்கவில்லை. :-) 6 குறிப்புகள் வந்து சேர்ந்த கால வரிசையை வைத்துதான் அடுத்து யாருடைய குறிப்பு என்பது முடிவு செய்யப்படும் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

//முதலில் 6 குறிப்புகள் அனுப்பியவர் என்ற வரிசையில் அவரது குறிப்புகள் முதலாவதாக வெளியாகியுள்ளது. :-) இதில் வேறு எந்தத் தகுதித் தேர்வும் வைக்கவில்லை./// பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ். அப்படித் தானே அண்ணா..:)..;)..;)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள்.குறிப்புக்கள், படம் எல்லாமே நல்லா இருக்கு..

மிக்க‌ நன்றி தர்ஷா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ். அப்படித் தானே//

அதே அதே.. பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் பப்ளிஷ்டு. :-) (இதுல எதுவும் சண்டை வந்துடக்கூடாது பாருங்க.. அதனாலத்தான் இந்த வரிசை.) இரண்டு பேர் ஒரே நேரத்துல 6 குறிப்புகள் அனுப்பி இருந்தா எங்க மெயில் பாக்ஸ்ல எது முதல்ல வந்ததா பதிவாகி இருக்கோ அதைத்தான் முதல்ல வெளியிடுவோம். :-)

சுமி சூப்பரான ரெசிப்பியோட அமர்க்களமா முகப்பில் ஜொலிக்கிறீங்க பா ரொம்ப ரொம்ப சந்தோசம் :)) வாழ்த்துக்கள் சுமி கண்ணு ;)

(அது தான் எனக்கு சாப்பிடும் போது விக்கல் வந்து இருக்கு, பய புள்ளங்க வேற நேரத்துல நம்பள பத்தி பேசக் கூடாது..;)) ஹிஹி விக்குச்சா இன்னிக்கு கூட வேர ஆளோட பேசினேனே உங்களை பத்தி இன்னிக்கும் விக்கல் வந்துச்சா ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

//சுமி சூப்பரான ரெசிப்பியோட அமர்க்களமா முகப்பில் ஜொலிக்கிறீங்க பா ரொம்ப ரொம்ப சந்தோசம் :)) வாழ்த்துக்கள் சுமி கண்ணு ;)// டேங்ஸ்ங்க‌ சுவா அம்மிணி.. நீங்கள் எல்லாம் கொடுக்கும் உற்சாகம் தான் காரணம் சுவா. முக்கியமா எங்க‌ அண்ணாக்களுக்கு தான் நன்றி சொல்லனும், நான் அறுசுவையில்(முகப் புத்தகம்) பாதி ராத்திரியில‌ போஸ்டிங் போட்டோ கூட‌ அடுத்த‌ நிமிஷமே லைக்கும் கமெண்டும் கொடுத்து என்னை உற்சாகப் படுத்துவார்கள். (விஜிஅண்ணாமற்றும்சரவணக்குமார்(கல்ப்ஸ்)அண்ணாக்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்ஸ்)
//ஹிஹி விக்குச்சா இன்னிக்கு கூட வேர ஆளோட பேசினேனே உங்களை பத்தி இன்னிக்கும் விக்கல் வந்துச்சா ;// ஒரு குரூப்பாத் தான் அலையறீங்க‌ போல‌..;)
மிக்க‌ நன்றி சுவா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மெக்சிகன் உணவு சூப்பரோ சூப்பர். அதற்கு பயன்படுத்திய‌ பொருட்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கு.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

தேங்யூ சோ மச் மீனா..:). நானும் இது தான் முதன் முறை வீட்டில் செய்தது, இங்குள்ள‌ ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு இருக்கேன். முதன் முறையிலேயே அருமையாக‌ வந்துவிட்டது..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கிச்சன் குயின் ஆப் த‌ டேவிற்கு வாழ்த்துக்கள்.அத்தனை குறிப்பும் அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க‌ நன்றி முசி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சிம்ப்ளி சூப்பர் ரெசிப்பி. நீங்கள் செய்து காட்டியிருக்கும் விதம் அருமை.
இதில் சேர்த்திருப்பது பிக்கிள்ட் அலப்பினோ தானங்க? அது பச்சையாகத்தானே இருக்கும் ?

//சிம்ப்ளி சூப்பர் ரெசிப்பி. நீங்கள் செய்து காட்டியிருக்கும் விதம் அருமை..// உங்கள் பதிவுக்கும் பாராட்டுக்கும் ரொம்ப‌ நன்றிங்க‌...
//இதில் சேர்த்திருப்பது பிக்கிள்ட் அலப்பினோ தானங்க? அது பச்சையாகத்தானே இருக்கும் ?// ஆமாங்க‌ , நான் கொஞசம் ரெட் புட் கலர் அன்ட் ரெட் சில்லி ஊறுகாய் சேர்த்து அரைத்து செய்தேங்க‌..:) ந்ன்றீ..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....