குழந்தைக்காக‌ உதவுங்கள் ப்ளீஸ்

தோழிகளே
என் குழந்தைக்கு 11 மாதம் தொடங்கி விட்டது. நான் ஊட்டியில் இருக்கிறென். ஊட்டியின் குளிரை பற்றி தோழிகள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறென். இதில் எங்கள் வீடு டைல்ஸ் தரை அதனால் இன்னும் குளிராக‌ தான் இருக்கும். என் குழந்தைக்கு இதனால் அடிக்கடி சளி பிடித்து கொள்ளும். அதனால் பழச்சாறு கொடுக்க‌ எனக்கு பயம். ஆப்பிள் மட்டும் வேகவைத்து கொடுப்பேன். என் மகன் மிகவும் ஒல்லியாக‌ இருகிரான். என் மகன் வளர‌ உதவுஙள். என்ன‌ என்ன‌ பழங்கள், காய்கறிகள், கஞ்சிகள் கொடுத்தால் சளி பிடிகாது. நான் வேலைக்கு செல்கிரென். மாலை என்ன‌ உனவு கொடுகலாம் என்று சொல்லுங்கள். எனக்கு அம்மா இல்லை தோழிகள் அம்மாவின் இடத்தில் இருந்து உதவுவீர்கள் என்ட்ரு நம்புகிறென்

Tasmanian blue gum, southern blue gum or blue gum, நீங்கள் ooty யில் வசிப்பதால் இதனை கூறுகிறேன்.

மேலே குறிப்பிட்ட‌ மரத்தின் தழையை வெந்நீரில் போட்டு கொதிக்க‌ வைத்து குழந்தையை குளிப்பாட்டினால் ச‌ளி பிடிக்காது.

பழங்களைப் பற்றி மற்றவர்கள் விளக்குவார்கள் என‌ நம்புகிறேன்.

Information is wealth

குழந்தைக்கு சளி பிடிப்பதற்க்கும் பழச்சாறு குடுப்பதற்க்கும் எந்த சமந்தம் இல்லை...நிங்க பழச்சாறு தாரளமாக தரலாம்...ஒல்லியாக இருப்பது பிரச்சனை இல்லை..உங்க குழந்தையின் எடை குறையமால் பாத்து கொள்ளுங்கள்...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

அரிசி கஞ்சி கொடுத்தால் குழந்தை கொழு கொழுன்னு இருக்கும்.கற்புறவல்லி சளிக்கு
ரொம்ப நல்லது.try pannunga

//வீடு டைல்ஸ் தரை அதனால் இன்னும் குளிராக‌ தான் இருக்கும். என் குழந்தைக்கு இதனால் அடிக்கடி சளி பிடித்து கொள்ளும்.// இது உண்மையாக இருந்தால் குளிர் பிரதேசங்களில் டைல் தரை வீடுகளில் வளரும் எல்லாக் குழந்தைகளும் சளியோடு அவதிப்பட வேண்டுமே! நிச்சயம் இது காரணமாக இருக்க முடியாது தோழி. வீட்டினுள் குளிராக இருந்தால் குளிர் தாங்கும் விதமான ஆடைகளை அணிவித்து வையுங்கள். குளிர் தாங்கக் கூடிய காலணிகள் அணிவித்து விடுங்கள். இரவில் பொருத்தமான போர்வை பயன்படுத்துங்கள்.

//அதனால் பழச்சாறு கொடுக்க‌ எனக்கு பயம்.// உண்மையில் அனேகமான பழங்களில் வைட்டமின் சீ இருக்கும். அது எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். சளித் தொற்று வராமலிருக்க இது உதவும். ஃப்ரிஜ்ஜில் வைத்துக் கொடுப்பதை. ஐஸ் கட்டி போட்டுக் கொடுப்பதை வேண்டுமானால் தவிர்க்கலாம்.

//ஆப்பிள் மட்டும் வேகவைத்து கொடுப்பேன்.// வேக வைத்ததும் பாதிக்கு மேல் சத்துக் கெட்டு சக்கை ஆகிவிடும். இப்படிக் கொடுப்பதனால் பெரிதாகப் பலனில்லை. திட உணவு ஆரம்பிக்கிற பழக்கம் வருவதற்காக & செரிமானப் பழக்கம் வருவதற்காகத்தான் ஆரம்பத்தில் வேக வைத்துக் கொடுப்பது. மற்றும்படி இதில் நன்மை பெரிதாக இல்லை.

‍- இமா க்றிஸ்

குழந்தைக்கு உளுந்து கஞ்சி கொடுகலாமா சளி பிடிக்காதா அல்லது சளி இருக்கும்பொது உளுந்து கஞ்சி கொடுத்தால் சளி அதிகம் ஆகுமா

புரதம் + காபோஹைட்ரேட் தானே இருக்கு! அதோட கொஞ்சம் பால் & சர்க்கரை சேர்ப்பீங்கன்னு நினைக்கிறேன். இதால எல்லாம் சளி வர முடியுமா! சளி இருக்கும் போது அதிகம் ஆகும் என்றும் தோணல.

இமா இப்படியெல்லாம் யோசிச்சது கிடையாது. எல்லாமே தான் கொடுத்தேன். பதினோராம் மாதம்... எங்கள் தட்டிலிருக்கும் எல்லாமே சாப்பிடுவது போல இருந்தார்.

கேள்வியை ஒரு தனி ஆள் பெயரில் குறிப்பிட்டு வைக்க வேண்டாம். பொதுவாக வைங்க. தெரிஞ்சவங்க பதில் சொல்லுவாங்க.

‍- இமா க்றிஸ்

u give health mix. i am giving 6 months onwards to my son. u give to child pomiegrannate juice, apple juice and carrot juice. u give to child more water daily.

1. DO OR DIE

Pomegranate juice kudukalama sathya 10 mth baby ku.

enaku 7 months baby iruka..avaluku ippavarai cerlac and milk mattum thaan kuturean..vera entha foodum ithuvarai kutukala...naan ennoda babyku ennalam kutukalam...plz help me...

எல்லாம் நன்மைக்கே

Rice,sambar,rasam kudunga
Fruits la apple, banana, avacado
Veggies carrot, beans, cauliflower, potato, beets kudukalam
Then milk kudunga oats ragi kudukalam.

மேலும் சில பதிவுகள்