நெல்லிக்காய் துவையல்

தேதி: December 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

திருமதி. துஷ்யந்தி அவர்களின் நெல்லிக்காய் துவையல் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பில் தேவைக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பினை வழங்கிய துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய நெல்லிக்காய் - 2
தேங்காய் - கால் மூடி
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - விரல் அளவில் பாதி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உளுந்து - 4 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயம், உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயம், இஞ்சி, நெல்லிக்காய், மிளகாய், தேங்காய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அத்துடன் இஞ்சி, நெல்லிக்காய் மற்றும் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம், மிளகாய், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
சுவையான நெல்லிக்காய் துவையல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நெல்லிக்காயில் துவையலா சூப்பர்.ஒருநாள் அவசியம் செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எல்லா குறிப்பும் அருமை. 6 ம் கலக்கலா செய்து இருக்கீங்க‌. வாழ்த்துக்கள்.

எல்லாம் சில‌ காலம்.....

இன்றைய‌ தினத்தின் கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள்!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ஹெல்தியான‌ துவையல்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.இந்த‌ துவையல் சாதத்திற்கு பொருந்துமா அல்லது இட்லி,தோசை க்கு நல்ல‌ இருக்குமா? வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

நெல்லிக்காய் துவையல் செய்ததில்லை, அடுத்து நெல்லிக்காய் பார்த்தால் இதற்க்காகவே வாங்கி விடுகிறேன். ஆரோக்கியமான குறிப்புங்க. தோசைக்கு நல்லாயிருக்கும் தானே. ?

கவி நெல்லிக்காய் துவையல் சூப்பர் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது செய்முறை குறிப்பினை வெளியிட்ட அட்மின்,மற்றும் குழுவினருக்கு நன்றி
குறிப்பினை தந்த துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.

முசி,
கண்டிப்பா சொல்லுங்க..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

பாலநாயகி ,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.

மெர்சி ,
வருகைக்கும்,பதிவிற்கும்,பாராட்டிற்கும் நன்றி.

மீனாள் ,
எல்லாவற்றிற்கும் ஜோடி சேர்ந்தது
கடைசியாக சாதத்தில் கூட நன்றாக இருந்தது
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

வாணி,
நன்றாக இருந்தது
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

ஸ்வர்ணா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா