நூல்கோல் மசாலா

தேதி: December 9, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் நூல்கோல் மசாலா குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

நூல்கோல் - 100 கிராம்
வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்
சோயா - 20
குடைமிளகாய் - கால் பாகம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
எண்ணெய், கடுகு, சீரகம் - தாளிக்க
புதினா மற்றும் கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், நூல்கோல், புதினா மற்றும் கொத்தமல்லித் தழையை நறுக்கி வைக்கவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், எள் மற்றும் பொட்டுக்கடலைச் சேர்த்து அரைத்து வைக்கவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். சோயாவை சுடு நீரில் போட்டு 20 நிமிடங்களாவது ஊறவைத்து பிழிந்து எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், புதினா, தக்காளி, நூல்கோல், குடைமிளகாய் மற்றும் சோயா சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், புளிக் கரைசல், உப்பு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
காய் வெந்ததும் தேங்காய் விழுது, கொத்தமல்லித் தழை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
வித்தியாசமான நூல்கோல் மசாலா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் கவிதா. மேலும் தொடருங்கள். அனைத்துக்குறிப்பும் அருமை

Be simple be sample

எனக்கு முகப்பாஇ பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு தெரியுமோ? அழகு அழகு... ஒவ்வொன்னும் ஒரு கலரா படங்கள் பளிச் பளிச். தொடருங்க. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

குறிப்புகள் எப்படி இருந்தது... ஒரு ஃபீட் பேக் கொடுங்களேன் கவிதா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாழ்த்துக்கள் கவிதா..படங்கள் பார்க்கவே அழகு.எல்லா குறிப்பும் படத்தோட‌ பார்க்கும் போது சூப்பரா இருக்கு..மேலும் தொடர‌ வாழ்த்துக்கள் கவிதா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆறு குறிப்பும் அருமை.பாராட்டுக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

super. கலக்கறீங்க‌. அருமையா இருக்கு. படங்களும் அருமை. வாழ்த்துக்கள். congrats கிட்சன் குயின்

எல்லாம் சில‌ காலம்.....

வாழ்த்துக்கள் கவி. உங்களிடம் எனக்கு பிடித்ததே ஆரம்பதிலே யாருடைய‌ குறிப்பை நீங்கள் பயன்படுத்திருக்கிறீர்கள் என்று சொல்லி அவர்களுக்கு ஒரு நன்றி சொல்லுவீர்கள்.சூப்பர் கவி.குறிப்பை கொடுத்தவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக‌ இருக்கும்.சூப்பர்.

Expectation lead to Disappointment

நூல்கோல் மசாலா சூப்பர்ஙக‌!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நூல்கோல் இதுவரை சாப்பிட்டதில்லை, சமைக்கவும் தெரியாது. அடுத்த முறை வாங்கி இது போன்று செய்துப் பார்க்கிறேன்.

நூல்கோல் இதுவரை சமைச்சதில்லை ரொம்ப அருமையா செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள் கிச்சன் குயின் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது செய்முறை குறிப்பினை வெளியிட்ட அட்மின்,மற்றும் குழுவினருக்கு நன்றி
குறிப்பினை தந்த லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

ரேவதி ,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

வனி ,
வந்துட்டேன்,சமைச்சுட்டேன்,எல்லாமே சாப்பிட்டுட்டேன்,நான் choose செய்த அனைத்துமே எளிமையான குறிப்புகள் தான்.எல்லாமே பிடிச்சு தான் சமைத்தேன்.
இப்போ தான் வர முடிந்தது,பொறுமையா அப்புறம் எல்லாருக்கும் பதில் போடுறேன்.

சுமி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

முசி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

பாலா,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

மீனாள் ,
அந்த லைன்ஸ் அறுசுவை குழுவினரோட கைவண்ணம் .நன்றி டீம்.
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

மெர்சி,
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

வாணி,
ரொம்ப ஹெல்தி.. இளசா பார்த்து வாங்குங்கோ..
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

ஸ்வர்ணா,
நீங்க ட்ரை பண்ணுங்க கண்டிப்பா பிடிக்கும்
வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி.

என்றும் அன்புடன்,
கவிதா