தேதி: December 10, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நர்மதா அவர்களின் வாய்ப்பன் குறிப்பு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய நர்மதா அவர்களுக்கு நன்றிகள்.
கோதுமை மாவு - 2 கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் - 2 (பெரியது)
சீனி - அரை கப்
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.

கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சீனி சேர்த்து கலந்து வைக்கவும். வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.

மசித்த வாழைப்பழத்தை கோதுமை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவும்.

சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும். (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம்)

வாணலியில் எண்ணெயைக் கொதிக்கவிடவும். கையைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு, பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பிறகு அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான வாய்ப்பன் தயார்.

ஒவ்வொரு முறையும் மாவை உருண்டையாகப் பிடிக்கும் போது கையைத் தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும்.
வாழைப்பழம் நன்கு கனிந்திருந்தால் மாவு கெட்டியாக வராது. எனவே பிசையும் போது மேலும் சிறிது மாவு சேர்த்துக் கொள்ளவும்.
Comments
rev akka
ரெசிபி சூப்பர்..:)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
ரேவ்ஸ்
வித்தியாசமா இருக்கு, இந்த ரொம்ப கனிஞ்ச பழம், நம்ம வீட்டில் அடிக்கடி நமக்கு சாப்பிடாம வீன பண்ணிட்டன்னு திட்டு வாங்கி கொடுகுறவர்... அவசியம் ஒரு நாள் ட்ரை பண்ணிடுவோம் ;) பேரே புதுசா இருக்கு.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கனி
கனி தான்க்யூ
Be simple be sample
வனி
இங்க வாழைப்பழம் வீண் ஆகாது வனி. ஒரு டசன்னாலும் அப்படியே சாப்பிடுவோம். சீக்கிரம் செய்து படம்போடுங்க. வாயப்பயம் அப்படின்னுறது வாயப்பன் ஆகிருக்குமோ.
Be simple be sample
வாய்ப்பன்
வாய்ப்பன் அருமை..:) வனி வீட்டில நடக்கும் திட்டு தான் எங்க வீட்டிலும் ..;) இனி அப்படி நடக்காம உங்க குறிப்பு கை கொடுக்கும்..:) //வாயப்பயம் அப்படின்னுறது வாயப்பன் ஆகிருக்குமோ// இந்த மாதிரி யோசிக்க உங்களை விட்டா வேற ஆளே இல்லைங்க..;) வாழ்த்துக்கள் ரேவ்ஸ்..:).
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ரேவ்ஸ்
வாய்ப்பன் ரொம்ப சிம்பிளான ரெசிபியா இருக்கு... நானும் செய்து பார்க்கிறேன்.. அருமை :)
"எல்லாம் நன்மைக்கே"
ரேவதி
வாய்ப்பன் சூப்பர். அவசியம் செய்துப் பார்க்கிறேன்.
ரேவ்ஸ்
ஈசி & டேஸ்டி ரெசிப்பி சூப்பர் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவதி
இன்றைய கிச்சன் ராணிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். வாய்ப்பன் ரொம்ப ஈஸியான இனிப்பு.சூப்பரா இருக்கு.
Expectation lead to Disappointment
ரேவதி.S
வாய்ப்பன் செய்துப் பார்த்தேன், டேஸ்ட் நல்லா இருந்தது. நன்றி