தேதி: December 10, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. T.S. ஜெயந்தி அவர்களின் தூதுவளை தோசை குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய T.S. ஜெயந்தி அவர்களுக்கு நன்றிகள்
புழுங்கல் அரிசி - ஒரு கப்
தூதுவளை இலைகள் - 12
மிளகு - 10
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
படத்தில் உள்ளது போல் தூதுவளை இலையின் நரம்பை எடுத்துவிட்டு அலசி வைக்கவும். புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரிசி ஊறியதும் களைந்துவிட்டு, மிளகாய், சீரகம், மிளகு, தூதுவளை மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

தோசைக் கல்லை சூடாக்கி அரைத்த மாவை மெல்லிய தோசையாக ஊற்றி வேகவிடவும்.

ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான தூதுவளை தோசை தயார். காரச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். சளித் தொந்தரவு உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது.

Comments
akka thuthuvali yengal vettil
akka thuthuvali yengal vettil ullathu,athu sinna sedithan 12 elaigal pothuma.
ரேவதி
இன்றைய கிச்சன் குயின் ரேவதிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
6 குறிப்புகளுமே விதம் விதமான ஆரோக்கிய குறிப்புகளா தேர்வு செய்து அசத்தியிருக்கீங்க ரேவதி..... சூப்பர்!!!
ரேவதி
தூதுவளை தோசை... யம்மி... ஹெல்தி ரெசிபி ரேவ்... குட்
"எல்லாம் நன்மைக்கே"
தூதுவளை தோசை
வித்தியாசமான குறிப்பு. அழகான படங்களும் குறிப்பும் வாழ்த்துக்கள் ரேவதி..
ரேவ்ஸ்
சத்தான ரெசிபி சூப்பர் ரேவ்ஸ் :) எங்கம்மா செய்து தருவாங்க ரேவ்ஸ் சளி பிடிச்சா இதே போல ;)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சத்யபிரியா
இலை கொஞ்சமா இருந்தா அரிசியின் அளவை றைச்சுக்கோங்கப்பா.
Be simple be sample
தோழிஸ்
தான்க்யூ அனு,பாக்யா,தெரசா,சுவா பாராட்டியதுக்கு
Be simple be sample
ரேவதி
நல்ல சத்தான ஆரோக்கியமுள்ள குறிப்பு.பார்ப்பதற்கு பச்சை பசேல் என்று இருக்கு.எனக்கு இங்கே கிடைக்காது.ஊருக்கு வரும் போது உங்க வீட்டுக்கு வந்துடுறேன்.
Expectation lead to Disappointment
Thanks akka
Thanks akka
ரேவதி சிஸ்
தூதுவளை தோசை சூப்பர்ங்க. வாழ்த்துக்கள்.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
ரேவதி
நல்லா இருக்கு.விருப்ப பட்டியலில் சேர்த்துள்ளேன்.வாழ்த்துக்கள்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
தூதுவளை தோசை
படத்தைப் பார்க்க தோசை சூப்பரா இருக்கும் என்று தெரியுது. தூதுவளைதான் கிடைக்காது. ;(
- இமா க்றிஸ்
தூதுவளை தோசை
தூதுவளை தோசை ரொம்ப அருமையாக இருந்தது. .நீங்க சொன்னபடி ரெண்டு முறை செய்து சாப்பிட்டேன் அக்கா. .சுவையாக இருந்தது. .....
அன்பு தோழி. தேவி