கேழ்வரகு இனிப்பு அடை

தேதி: December 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. எஸ். சிவகாம சுந்தரி அவர்களின் கேழ்வரகு இனிப்பு அடை குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய எஸ். சிவகாம சுந்தரி அவர்களுக்கு நன்றிகள்

 

கேழ்வரகு மாவு - கால் கிலோ
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கப்
ஏலக்காய் - 5
எண்ணெய் - 100 கிராம்


 

பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
வெல்லம் கரைந்ததும் அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் பொடித்த ஏலக்காய்ச் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.
பிறகு அதனை கேழ்வரகு மாவில் ஊற்றவும்.
வெல்லக் கரைசல் கேழ்வரகு மாவுடன் ஒன்றாகச் சேரும்படி நன்கு பிசைந்து கொள்ளவும்.
தோசைக் கல்லைச் சூடாக்கி, எண்ணெய் தடவி, பிசைந்த மாவை எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளாக உருட்டி அடையாகத் தட்டி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான, ஆரோக்கியமான கேழ்வரகு இனிப்பு அடை தயார்.
இதே போல் கேழ்வரகு முருங்கைக்கீரை அடையும் செய்யலாம். அதற்கு வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அத்துடன் முருங்கைக்கீரையையும் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதக்கியவற்றைக் கேழ்வரகு மாவில் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசையவும்.
பிசைந்த மாவை கேழ்வரகு இனிப்பு அடை செய்தது போல தோசைக் கல்லில் தட்டி வேகவிட்டு எடுத்தால், கேழ்வரகு முருங்கைக்கீரை அடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல‌ சத்தான குறிப்பு ரேவ்ஸ். எனக்கு இங்க‌ இந்த‌ அயிட்டம் எல்லாம் கிடைக்காது,படத்தை பார்த்து பெருமூச்சுவிட்டுக்கிறேன்.வாழ்த்துக்கள்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

super... ஹெல்தி அடை....

கேழ்வரகில் எங்க அம்மா கருப்பட்டி சேர்த்து இது போன்று இனிப்பு அடை செய்து தருவார்கள் ரேவதி. ஆனால் முருங்கையிலை சேர்த்து செய்ததில்லை. முருங்கையிலையை தனியே வேக வைக்க வேண்டாமா ? இதிலே வெந்து விடுமா? ஹெல்த்தியான குறிப்பு.

இரண்டு அடையும் பார்க்கவே சாப்பிடனும்னு தோனுது சூப்பர் பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முருங்கைகீரை, வெங்காயம் வதக்கி மாவில் போடு அப்பறம் பிசைந்து சுடணும்பா. இல்லனா செரிக்காது. தான்க்ஸ்

Be simple be sample

மீண்டும் ஒரு சத்துள்ள‌ குறிப்பு.வாழ்த்துக்கள் சமையல் ராணியே.

Expectation lead to Disappointment

குறிப்பு ரொம்ப‌ பிடிச்சிருக்கு, படங்களும் அழகா இருக்கு.
சீக்கிரமே செஞ்சிடுறேன்...
வாழ்துக்கள்!