தேதி: December 11, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அஸ்மா அவர்களின் மலாய் சட்னி குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 150 கிராம்
காய்ந்த மிளகாய் - 20 அல்லது 25
நல்லெண்ணெய் - 150 மில்லி
உப்பு - ஒரு தேக்கரண்டி
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, தோலுரித்த பூண்டைச் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். (பூண்டு மிகவும் கருகிவிடாமல் வேகும் அளவு பதமாக வதக்கவும்).

அதே எண்ணெயில் தோல் சீவி நறுக்கிய இஞ்சியைப் போட்டு லேசாக சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும்.

பிறகு காய்ந்த மிளகாயைத் தீய்ந்துவிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வதக்கிய பூண்டுடன் இஞ்சி, வறுத்த காய்ந்த மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து, வாணலியில் உள்ள (பொரித்த) எண்ணெயையும் ஊற்றி மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். சுவையான மலாய் சட்னி தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.

எண்ணெய் கூடுதலாக தேவைப்பட்டால் இட்லி பொடிக்கு ஊற்றுவது போல் சட்னியில் ஊற்றிச் சாப்பிடலாம்.
Comments
சுவா
மலாய் சட்னி என்றால் என்ன என்று பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தேன்.நல்ல கார சாரமா இருக்கும் போல.
Expectation lead to Disappointment
மலாய் சட்னி
மலாய் சட்னி ஆஹா சொல்லும் போதே நாவூறுது ஆமாங்க காரசாரமான சட்னி நல்ல மழை நேரத்துல செஞ்சதுல சூப்பரா இருந்துச்சு என்னவருக்கு இதுவும் ரொம்ப பிடிச்சுது.இதுவும் இட்லி,தோசை,தயிர்சாதத்துக்கும் மிக பொருத்தம் :) நல்லா செரிமானம் கொடுக்க கூடிய சட்னி.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மீனா
மீனா நன்றிப்பா :) ஆமா காரசாரமான சுவையான சட்னி அவசியம் செய்து பாருங்க
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
swarna
வாழ்த்துக்கள் ஸ்வர்னா. உங்க குறிப்பு அனைத்தும் அருமை. கங்ராட்ஸ் கிட்சன் குயின்.
எல்லாம் சில காலம்.....
சுவா
மலாய் சட்னி ஈசி அன்ட் டேஸ்ட்டியா இருக்கு சுவா..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
பாலநாயகி
மிக்க நன்றிங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுமி
சுமி ஆமாம் பா ஈசி அண்ட் டேஸ்டியேதான் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வர்னா மலாய் சட்னி
ஸ்வர்னா மலாய் சட்னி சூப்பர்.ஆனா காரசாரமான சட்னிக்கு.காரமே விரும்பாத மலாய்காரங்க பேர் எப்படி வந்தது
நிஷா
மிக்க நன்றிங்க :) அவ்வ்வ் இப்படிலாம் கேட்டா நான் என்ன பன்னுவேன்
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ஸ்வர்ணா,
ஸ்வர்ணா,
வாழ்த்துக்கள் குயின்..
எல்லாமே பளிச்சுன்னு அருமையா இருக்கு
கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்
என்றும் அன்புடன்,
கவிதா
swarna
மலாய் சட்னி இன்று செய்தேன்.காரமா சுவையா இருந்தது. நன்றி உங்க குறிப்புக்கு.
கவி
கவி மிக்க நன்றி செய்துட்டு சொல்லுங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தர்ஷா
மிக்க நன்றி தர்ஷா :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
swarna
மலாய் சட்னி சூப்பர்
ருசியா௧ இருக்கு
ML