கொங்கு கோழி வறுவல்

தேதி: December 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோழி - ஒன்று
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 10
காய்ந்த மிளகாய் - 4
மல்லி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
நெய் - 50 கிராம்


 

கோழியை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைக்கவும்.
தேங்காயைத் துருவி, அத்துடன் மல்லியைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மிளகுடன் மிளகாய், வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ளவற்றைப் போட்டுக் கிளறவும்.
அத்துடன் கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, மூடி வைத்து குறைந்த தீயில் சுமார் 20 நிமிடங்கள் வேகவிடவும்.
வெந்த பிறகு தக்காளியைச் சேர்த்து, சிறிது சுடுதண்ணீர் தெளித்து சுமார் 10 நிமிடங்களுக்கு நன்கு பிரட்டவும். பிறகு மேலும் சிறிது சுடுதண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கறி மிருதுவாகும் வரை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.
சுவையான கொங்கு கோழி வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரா இருக்கு... சாப்பிடதான் விடமாட்டாங்க.... பறவை காய்ச்சல் பீதி

வித்தியாசமா இருக்கு கொங்கு கோழி வறுவல்.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

மிக்க நன்றி ப்ரியா :) நான் காய்ச்சல் அடிச்சப்ப தான் செய்தேனே இதை ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி மீனா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இதுவும் சுவை பராவால்ல நான் செய்த 6 குறிப்புகளில் இதற்கு மட்டும் என் ஹஸ் மதிப்பெண் குறைவாக போட்டார் வாசனை இல்லாம இருந்ததாலோ என்னவோ தெரில இஞ்சி பூண்டு சேர்க்காமல் செய்வதால் வாசனை மிஸ்ஸிங் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர், சிம்பிளா இருக்கு.

Be simple be sample

ஆமா சிம்பிள் ரெசிபி நன்றி ரேவா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்க்கும் போதே சிக்கனை அபேஸ் பண்ணனும்ன்னு போல இருக்கு. நீ சிக்கன் கட் பண்ணியிருக்க விதம் சூப்பர்.. வாழ்த்துகள் சுவா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

செய்முறை பார்க்கவே ஈஸியாகவும் அழகாவும் இருக்குங்க‌. நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

super. yummy chicken. பார்க்கவே நாக்கு ஊறுது. எல்லாமே ரொம்ப‌ நல்லா பண்ணி இருக்கீங்க‌. வாழ்த்துக்கள்.

எல்லாம் சில‌ காலம்.....

கொங்கு கோழி வறுவல் அமர்க்களமா இருக்கு.. இனி கோழி செய்யும் போது இந்த‌ மாதிரி ட்ரை செய்திடறேன்,, வாழ்த்துக்கள் சுவா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நீ இங்க வா நானே செய்து தாரேன் :) நன்றி........

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மெர்சி மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுமி மிக்க நன்றிப்பா :) கண்டிப்பா செய்து பாருங்க கொஞ்சம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து செய்து பாருங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.