மொச்சை முருங்கை புளிக்குழம்பு

தேதி: December 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களின் மொச்சைக்கொட்டை முருங்கைக்காய் புளிக்குழம்பு குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோ சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றிகள்.

 

காய்ந்த மொச்சைக்கொட்டை - ஒரு கப்
முருங்கைக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 15
பொடியாக அரிந்த வெங்காயம் - கால் கப்
பொடியாக அரிந்த தக்காளி - 2
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
கலந்த மிளகாய்த் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெந்தயப் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
நல்லெண்ணெய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

மொச்சைக்கொட்டையை முந்தைய நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிடவும்.
முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஊறிய மொச்சைக்கொட்டையைக் குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்து, ஆறியதும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பிறகு கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
வதங்கியதும் வெந்தயப் பொடி சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பிறகு புளிக் கரைசலை ஊற்றவும்.
அத்துடன் முருங்கைக்காய், கலந்த மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
முருங்கைக்காய் வெந்ததும் மொச்சைக்கொட்டையைச் சேர்த்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.
சுவையான மொச்சை முருங்கை புளிக்குழம்பு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள்.

6 வித்தியாசமான‌ குறிப்புகளை செய்து காட்டியிருக்கிறீர்கள்! அனைத்தும் சூப்பர்! படங்களுடன் பார்க்கவே அருமையா இருக்கு!!

புளிக்குழம்பு சூப்பர் ரே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.