சில்லி மெக்ஸிகன் ரைஸ்

தேதி: December 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. முத்துலெட்சுமி அவர்களின் சில்லி மெக்ஸிகன் ரைஸ் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

உதிரியாக வேகவைத்த சாதம் - 2 கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
நீளமாக நறுக்கிய கோஸ் - அரை கப்
நீளமாக நறுக்கிய சிவப்பு குடைமிளகாய் - கால் கப்
நீளமாக நறுக்கிய பச்சை குடைமிளகாய் - கால் கப்
நீளமாக நறுக்கிய கேரட் - கால் கப்
நசுக்கிய பூண்டு - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான அனைத்தையும் தயாராக வைக்கவும். மிளகாய் வற்றலை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் பூண்டைச் சேர்த்து வதக்கி, பிறகு கேரட்டைச் சேர்த்து வதக்கவும்.
கேரட் லேசாக வதங்கியதும் கோஸைச் சேர்த்து வதக்கி, பிறகு குடைமிளகாய், உப்பு, பொடித்த மிளகாய் வற்றல் மற்றும் மிளகாய்த் தூள் போட்டு வதக்கவும்.
அத்துடன் தக்காளி சாஸ் மற்றும் சோயா சாஸ் போட்டு வதக்கவும்.
பிறகு வேக வைத்த சாதத்தைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
ஸ்பைசி & டேஸ்டி சில்லி மெக்ஸிகன் ரைஸ் ரெடி. கொத்தமல்லித் தழை தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Congrats :) asathalaana kurippugalodu mugappil magudam sudi irukinga... vaazthukkal :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவதி,
எல்லாமே அழகா,அருமையா செய்து இருக்கீங்க
வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்
தொடர்ந்து குறிப்புகளை எதிர்பார்கிறேன்

என்றும் அன்புடன்,
கவிதா

பார்க்கும்போதே யம்மி. சூப்பர் ரேவ். வாழ்த்துக்கள்

Be simple be sample

அருமையான‌ குறிப்பு ரேவ். பார்க்கும் போதே சாப்பிட‌ தோணுது. வாழ்த்துக்கள் ரேவ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கலக்கல் போட்டோஸ் ரேவதி. ஒவ்வொரு குறிப்புமே வித்யாசமாக இருக்கு. ஆறு குறிப்பில் உங்களுக்கு ரொம்ப பிடித்த குறிப்பு எது. இது போல் நிறைய குறிப்புகள் கொடுத்து அறுசுவை முகப்பை அலங்கரிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்:-)

சில்லி மெக்சிகன் ரைஸ் செம‌ கலரில் அருமையாக‌ இருக்கு.. யம்மி

"எல்லாம் நன்மைக்கே"

சூப்பரான‌ குறிப்பு.
நீங்களும் அசத்தலா செஞ்சிருக்கீங்க‌ (கடைசி படம் ரொம்ப‌ அழகு, இப்பவே சாப்பிடணும் போல‌ இருக்கு:)

என் குறிப்பை மிகவும் அழகாக வடிவமைத்து நான் செய்த பிழைகளை திருத்தி மிகவும் அழகாகி முகப்பை அலங்கரித்த அட்மின் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். பத்மா அவர்களுக்கு ஸ்பெஷல் தாங்ஸ்..

இதில் நான் கலந்துக் கொள்ள காரணமாக இருந்த வனி அவர்களுக்கு மிக்க நன்றி.. என் ஊக்கபடுத்தியதற்கும் ஒரு ஸ்பெஷல் தாங்ஸ் தாங்க் யு வனி..

செண்பா அண்ணி மொத்தம் நான் 7 செய்துள்ளேன். இறால் பஜ்ஜி மட்டும் மிஸ்ஸிங். ஆறு குறிப்பு மட்டும் தான் போட முடியும் என்பதால் அதை பிறகு வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன்.. இந்த 7 ம் ரொம்ப வித்தியாசமான சுவைகள் 7 குறிப்புமே செம்ம சூப்பரா இருந்தது. வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. என்னை மிகவும் கவர்ந்தது கோழி கொத்தமல்லி மசாலா செம்ம டேஸ்ட். சிக்கன் பல விதத்தில் செய்திருக்கிறேன். பட் இந்த டேஸ்ட் ரொம்ப புதுசா இருந்தது. எனக்க ரொம்ப பிடிச்சதது. மற்ற அனைத்து டிஸ்சும் சூப்பர்.

என்னை வாழ்த்திய அனைத்து தோழிகளுக்கும் நன்றி.

என்னை ஊக்கபடுத்திய என் நெருங்கிய தோழிகளுக்கும் மிக்க நன்றி.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரே கலக்கலான ரெசிப்பிகளோடு முகப்பில் கிச்சன் குயினாக ஜொலிப்பதை பார்க்க ரொம்ப சந்தோசமாக இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

super o super. kalakala iruku ellame. vazhthukkal. congrats kitchen queen.

எல்லாம் சில‌ காலம்.....