பான் ப்ரெட்

தேதி: December 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

ப்ரெட் துண்டுகள் - 10
முட்டை - 3
பால் - 3 கப்
சீனி - ஒரு கப்
ஆரெஞ்ச் எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி / வெனிலா எசன்ஸ்
உலர்ந்த திராட்சை


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பாலுடன் முட்டை, சீனி மற்றும் எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அத்துடன் சிறு துண்டுகளாக்கிய ப்ரெட்டைச் சேர்த்துக் கலந்து, பட்டர் பூசிய பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
பிறகு உலர்ந்த திராட்சை தூவி முற்சூடு செய்த அவனில் 150 - ல் 30 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
சுவையான பான் ப்ரெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பான் ப்ரெட் சூப்பரா இருக்கு. செய்வதும் சுலபம் போல‌. படங்கள் பளிச்..பளிச். வாழ்த்துக்கள் தர்ஷா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

தெரசா பார்க்கவே அருமையாயிருக்கு கன்டிப்பா செஞ்சுபாக்கனும் ஈசியாவும் இருக்கும்போல வாழ்த்துக்கள் இன்னும் நிரைய உங்க ரெசிபி பார்ர்க்கனும்.சூப்பர்

வாவ்... இது மாலத்தீவு பான் போகிபா போலவே இருக்கு :) இலங்கை சமையல் சாயல் நிறைய உண்டு மாலத்தீவு சமையலில். சூப்பரா செய்திருக்கீங்க.... படங்களுக்காகவே உங்க குறிப்பை எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்குது தர்ஷா... அசத்தல இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மீண்டும் என் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றிகள்..

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்க.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஈசியாகவும் சுவையானது கூட செய்து பாருங்க.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.இது ஒரு ஃப்ரான்ஸ் டெசெட். படங்களுக்காகவே உங்க குறிப்பை எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்குது தர்ஷா.// உங்களிடம் இருந்து இதை கேட்க சந்தோசமா இருக்கு.

பான்ப்ரெட் சூப்பரா இருக்கு, செய்முறையும் ரொம்ப‌ ஈஸியா இருக்கு, இந்த வாரம் செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

கலக்கலா இருக்கு பான் ப்ரெட் அப்படியே பார்சல் பன்னிடுங்க :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Idai oven illama seiyalama

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.செய்து பார்து சொல்லுங்க.

பார்சல் பன்னி விட்டேன்.

செய்யலாம்.பாலுடன் முட்டை, சீனி மற்றும் எசன்ஸ் கலவையில் ப்ரெட் துண்டுகளை தோய்த்து தோசைக்கல்லில் பட்டர் போட்டு வாட்டி எடுக்கலாம். அந்த முறையில் செய்து
அனுப்பிறேன் பிறகு.

தர்சா,
அவசியம் ட்ரை பண்ண போறேன்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப நன்றி கவிதா.

சூப்பர் :) செய்து சுவைத்தும் ஆச்சு. ஃபேஸ்புக்கில் படமும் காட்டியாச்சு. சுவையான சுலபமான குறிப்புக்கு மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம் எல்லாம் டிஸ்ஸுமே சூப்பர், படமும் ரொம்ப‌ அழகு.
கிச்சன் குயின் உங்களுக்கு என்னோட‌ விஷ்சஸ், லேட்டா விஸ் பண்றதுக்கு சாரி
கொஞ்சம் ப்ராப்ளம் அதான் யாருக்குமே விஸ் பண்ணல‌. அறுசுவை பக்கமே 10 நாளுக்கு அப்புறம் இன்னைக்கு தான் வர்றேன்.

எல்லா கிச்ச‌ன் குயினுக்கும் என்னோட‌ விஸ்சஸ்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

ரொம்ப நன்றி வனி அக்கா.சூப்பரா வந்திருக்கு கேக் போல.

ரொம்ப நன்றி சுபி.உங்கள தேடினேன் வந்தச்சு.எல்லோர் சார்பாகவும் நன்றி .