தேதி: December 13, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புலாவ் அரிசி - 3 கப்
தேங்காய் - 2
கொத்தமல்லித் தழை - 2 சிறு கட்டுகள்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 10 பற்கள்
வெங்காயம் - 5
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 7
பட்டை - சிறிதளவு
கசகசா - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முந்திரி - அலங்கரிக்க
அரை மூடி தேங்காயைத் துருவி, அத்துடன் ஏலக்காய், கிராம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பட்டை, மல்லி விதை மற்றும் கசகசா சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

அத்துடன் ஒன்றரை கட்டு கொத்தமல்லித் தழையையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் தேங்காயைத் துருவி 3 டம்ளர் அளவு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு புலாவ் அரிசியை நன்றாக கழுவி, ரைஸ் குக்கரில் போட்டு, அத்துடன் வதக்கியவற்றைச் சேர்த்து 3 டம்ளர் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.

சுவையான கொத்தமல்லி புலாவ் தயார். மீதமுள்ள கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கி வறுத்த முந்திரியையும் சேர்த்து அலங்கரிக்கவும். திருமதி. சாந்தி அவர்களின் கொத்தமல்லி புலவு குறிப்பைப் பார்த்து, சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்த குறிப்பு இது.

Comments
வனி..
கொத்தமல்லி புலாவ் அருமை, வாழ்த்துக்கள் வனி..
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனி உடம்பு பரவாயில்லயா
வனி உடம்பு பரவாயில்லயா கொத்தமல்லி புலாவ் வாவ் பார்க்கவே சூப்பராயிருக்கு கன்டிப்பா செஞ்சுபாக்கிரேன்.நன்றி வாழ்த்துக்கள்
வனி
கொத்தமல்லி புலாவ் பாக்கவே சூப்பர், இன்னும் சாப்பிட்டா எப்படி இருக்கும்,
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
வனி
கொத்தமல்லி புலாவ் வாசனை மணக்குது :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
hai vani akka I am a big fan of you
Ungaludaiya samayal niraya seithiruken ellame nalla vandhirukuthu athukku oruperiya thanks chicken,aambur,mattan briyanis. Thakkali, kadalai, vellai kurumaas. Kaththirikaai pirattal kadalai kulambu paan pogipa innum niraya sollitte pogalam but ennudaiya kutti vandu aluga aarambikkiran so bye (achchacho solla vandha vishayaththaye marandhuten koththamalli pulav super indha week kandipa senjitu solren) mobile nrathale Tamil la type pannamudiyala sry by dhana
வனி
சூப்பர்லிஷியஸ்
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
புலாவ்
லஞ்ச் பாக்ஸ்க்கு ஏத்த ரெசிபிங்க... ட்ரை பண்ணிட்டு சொல்றேன் சரியா...?
வாழ்த்துக்களுடன்,
கவிதாசிவகுமார்.
anbe sivam
டீம்
சுவையான குறிப்பும் கொடுத்து, அதை படமெடுத்து கொடுத்த எனக்கு பேரும் கொடுத்து, அழகா வெளியிட்டிருக்கீங்க :) நன்றி நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி
சுமி, நிசா, ஹேமா, சுவா, தனா, கவிதா, கவிதாசிவகுமார்... அனைவருக்கும் நன்றி :) திருமதி சாந்தி குறிப்பு, செய்து காட்டியது தான் நான். நன்றிகள் அவர்களுக்கே சொந்தம். அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
superrrrr
superrrrr