தாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி

தேதி: December 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மனோகரி அவர்களின் தாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

மீன் - அரை கிலோ
தேங்காய்ப் பால் - 2 கப்
வெங்காயம் - ஒன்று
சோள மாவு - 2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - ஒரு மேசைக்கரண்டி
மீன் சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
பேஸில் இலை - ஒரு மேசைக்கரண்டி
உப்புத் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
அரைக்க:
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 4 பற்கள்
இஞ்சி - ஒரு துண்டு
லெமன் கிராஸ் - ஒன்று
தனியா - ஒரு மேசைக்கரண்டி
மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி


 

மீனைச் சுத்தம் செய்து வேண்டிய அளவில் துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாயைத் தண்ணீரில் ஊற வைத்தெடுத்து, அத்துடன் அரைக்கக் கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதைப் போட்டு வதக்கவும். அத்துடன் அரை கப் தேங்காய்ப் பாலை ஊற்றி நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும்.
மசாலாவின் பச்சை வாசனை நீங்கியதும், மீதிமுள்ள தேங்காய்ப் பாலில் சோள மாவைக் கரைத்து ஊற்றி, நறுக்கிய வெங்காயம், சோயா சாஸ், மீன் சாஸ், உப்பு, கொத்தமல்லி மற்றும் பேஸில் இலைகளைப் போட்டு, அரை கப் நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பின் தீயைக் குறைத்து வைக்கவும். நன்கு கொதித்து கெட்டியானவுடன் மீன் துண்டுகளைப் போட்டு வேகவிடவும்.
மீன் வெந்தவுடன் எலுமிச்சைச் சாற்றை ஊற்றி இறக்கவும்.
சாதத்துடன் சூடாகப் பரிமாற, சுவையான தாய்லாந்து ரெட் ஃபிஷ் கறி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தெரசா தாய்லாந் ரெட் ஃபிஷ் கறி அருமையாயிருக்கு வாழ்த்துக்கள்

வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நிசாம்மா..

ரெட் ஃபிஷ் கறி சூப்பரா இருக்கு வாழ்த்துகள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பார்க்கவே எச்சில் ஊருது. செம‌ சூப்பரா செய்து இருக்கீங்க‌. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

சூப்பர்வ். வாழ்த்துக்கள் கிச்சன் குயின் அவர்களே! விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு. நன்றி.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

நன்றி சுவர்னா.

பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

ரொம்ப நன்றி ..