பட்டி ஷு (பிரெஞ்சு பப்ஸ்)

தேதி: December 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

திருமதி. ரஸியா அவர்கள் வழங்கியுள்ள பட்டி ஷு என்ற பிரெஞ்சு பப்ஸ் குறிப்பு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய ரஸியா அவர்களுக்கு நன்றிகள்.

 

தயார் செய்த மாவு - 300 கிராம்
கோழி (எலும்பு நீக்கியது) - கால் கிலோ
வெங்காயம் - பாதி
வெள்ளை மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு


 

கோழியைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் வெங்காயத்தைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் மிளகுத் தூள், உப்பு, அஜினோமோட்டோ மற்றும் முட்டை (ஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்) சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
பிறகு தயார் செய்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து, சிறு வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
அதில் ஒரு வட்டத் துண்டின் நடுவில் இறைச்சி கலவையை வைத்து, அதன் மேல் இன்னொரு வட்டத்தை வைத்து மூடி, ஓரங்களை விரலால் அழுத்தி மூடவும்.
இதே போல் மீதமுள்ள மாவிலும் இறைச்சிக் கலவையை வைத்து மூடி, அவனில் வைத்து 220 டிகிரி ஃபாரன்ஹீட்டில் நிமிடங்கள் வேக வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து தனியாக எடுத்து வைத்துள்ள முட்டையின் மஞ்சள் கருவை நன்றாகக் கலந்து, பப்ஸின் மேல் பரவலாகத் தடவி மீண்டும் அவனில் வைத்து வேகவிடவும். சிவந்த பிறகு வெளியே எடுக்கவும்.
டேஸ்டி பட்டி ஷு ரெடி. சூடாகப் பரிமாறவும்.

<a href="/tamil/node/10201"> பப்ஸ் </a> குறிப்பில் உள்ளது போல் மாவைத் தயார் செய்து கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்றைய கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள் . எல்லஎல்லா குறீப்புகளும் சூப்பர். பப்ஸ் பார்த்துக்கறேன். செய்யறது கஷ்டம் அவன் இல்லாம, மேலும் பல குறிப்புகள் குடுக்கணும்.

Be simple be sample

அப்பா!!! முகப்பு அப்படியே கலஃபுல்லா இருக்குங்க... படங்கள் அத்தனை அழகு, அத்தனை பளிச்சுன்னு இருக்கு :) இன்று குயின் பட்டம் வாங்கி முகப்பில் மகுடம் சூடிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். எல்லா குறிப்பும் சூப்பர்.

இந்த ஷூ எனக்கு சரியா வருமா தெரியல... ஆனா அவசியம் ட்ரை பண்ண போறேன்... ஐ லைக் இட் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி.

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரேவதி. நிச்சயமாக..

இன்றைய‌ கிச்சன் குயினுக்கு மனமார்ந்த‌ வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

பிரெஞ்சு, மெக்ஸிகன், சைனீஸ். தாய் .....வாவ்!!! பார்க்குறதுக்கே கலக்கலா இருக்குங்க‌! சூப்பர்!

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி. பப்ஸ் பதம் கொண்டு வருவது தான் கஸ்ரமா இருந்த ஆனாலும் ஷு சுவையா வந்திச்சு.

பட்டி ஷூ சூப்பர்.எல்லா குறிப்பின் படங்களும் அழகு.வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பாராட்டுக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி அனு.

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி முசி.

இன்றைய கிச்சன் குயினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :) சூப்பரான ரெசிபி ரொம்ப அழகா செய்து காட்டியிருக்கீங்க படங்கள் எல்லாமே அழகா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்றைய கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள் . எல்லா குறிப்புகளும் சூப்பர். படங்கள் அனைத்து சூப்பரா இருக்கு. வாழ்த்துகள்.. தர்ஷா பெயர் கரக்ட்டா...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இன்றைய கிச்சன் குயினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எல்லாமே அருமையான் குறிப்புகள். கலக்கலான பளிச் படங்கள். மேலும் குறிப்புகள் வழங்க‌ வாழ்த்துக்கள் தர்ஷா..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ரொம்ப நன்றி சுவர்ணா.

ரொம்ப நன்றி ரேவதி.பெயர் கரக்ட் தான்.

ரொம்ப நன்றி சுமி.

பப்ஸ் அழகாக‌ வந்திருக்குங்க‌ வாழ்த்துக்கள். . தயார் செய்த‌ மாவுனா நார்மல் சப்பாத்தி மாவுதானா?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி. http://www.arusuvai.com/tamil/node/10201ல் இருக்கிற முறையில சப்பாத்தி பதத்திற்கு செய்தேன்.

கிச்சன் குயின் தர்ஷாவிற்கு வாழ்த்துக்கள்.
எல்லா குறிப்புகளுமே அருமை. படங்கள் அனைத்துமே பளிச்சுன்னு தெளிவாக இருக்கு. மேலும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள் தர்ஷா

ரொம்ப நன்றி..