தாய்லாந்து சிக்கன் ஃப்ரைட் ரைஸ்

தேதி: December 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தேவா அவர்களின் தாய்லாந்து சிக்கன் பிரைட் ரைஸ் குறிப்பு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தேவா அவர்களுக்கு நன்றிகள்

 

தாய்லாந்து ஜாஸ்மின் ரைஸ் அல்லது பாஸ்மதி ரைஸ் - 2 கப்
தேங்காய்ப் பால் - 200 மில்லி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - அரை கப்
சிகப்பு குடை மிளகாய் துண்டுகள் - கால் கப்
ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கொத்து
பெரிய வெங்காயம் - ஒன்று
ஃபிஷ் சாஸ் - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4 (தண்ணீரில் ஊறவைத்து அரைத்தது)
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சீனி - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சன் ஃப்ளவர் எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

சிக்கன் துண்டுகளை நீளவாட்டில் மெல்லிதாக நறுக்கி வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கெட்டியான தேங்காய்ப் பாலில் தண்ணீர் ஊற்றி 4 கப் அளவாக எடுத்துக் கொள்ளவும். குக்கரில் அரிசியுடன் தண்ணீருக்கு பதிலாக தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய், சன் ஃப்ளவர் எண்ணெய் இரண்டையும் கலந்து ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பூண்டு விழுதைப் போட்டு 30 வினாடிகள் வதக்கவும்.
அத்துடன் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து நன்றாக 2 - 3 நிமிடங்கள் வேகும் வரை வதக்கவும். பிறகு ஃபிஷ் சாஸ் சேர்க்கவும்.
பிறகு மிளகாய் விழுது, சீனி, உப்பு மற்றும் குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் வதக்கவும்.
அத்துடன் வேக வைத்த சாதம் சேர்த்துப் பிரட்டி, ஸ்ப்ரிங் ஆனியனை நறுக்கித் தூவி இறக்கவும்.
டேஸ்டி தாய்லாந்து சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ரெடி.

தாய்லாந்து ப்ரைட் ரைஸுக்கு தேங்காய்ப் பாலில் வேக வைத்த சாதம் தான் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும். சாதாரணமாக வேக வைத்த சாதத்திலும் செய்யலாம். ஆனால் தேங்காய்ப் பாலில் வேக வைத்த அளவுச் சுவை இருக்காது.

வெங்காயம் மற்றும் குடைமிளகாயை அதிகம் வதங்கவிடாமல் க்ரிஸ்பியாக இருந்தால் நன்றாக இருக்கும்.

ஃபிஷ் சாஸில் உப்பு அதிகமாக இருப்பதால் உப்பு குறைவாகவே போட்டுக் கொள்ளவும். தாய்லாந்தில் உப்பிற்கு பதிலாக பல சமையலில் ஃபிஷ் சாஸே உபயோகிப்பார்கள். ஃபிஷ் சாஸிற்கு பதிலாக சோயா சாஸ் உபயோகித்தால் இன்னும் உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

vazhthukkal. congrats kitchen queen. chance illa. colourfulla கலக்கலா இருக்கு. நான் உங்க‌ ஃபேன். அழகா செர்வ் பண்ணி இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

தாய்லாந்து சிக்கன் ஃப்ரைட் ரைஸ் பளிச் படங்களோட‌ அருமையா இருக்கு வாணி.. ட்ரை செய்துட்டு சொல்றேன்.. வாழ்த்துக்கள்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

தோழிகளே, உங்கள் அனைவரின் வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி.

முக புத்தகத்தில் வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் , லைக் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், நீங்கள் அளிக்கும் உற்ச்சாகமும் தான் மேலும் குறிப்புகளை அனுப்ப தூண்டுகோலாயிருக்கிறது.

தோழிகளின் முகப் புத்தக வாழ்த்துக்களை இமெயில் மூலம் அனுப்பிய தோழி இமாவுக்கு மிக்க நன்றி.

என் சமையல் குறிப்பை தேர்ந்தெடுத்து சமைத்ததுக்கு முதலில் என்னோட நன்றியை சொல்லிக்கிறேன். நான் செய்வதைவிடவும் நீங்க செஞ்சிருக்கற பிரைட் ரைஸ் கலர்ஃபுல்லா பார்க்கவே நல்லா இருக்கு. உங்க மற்ற சமையல் குறிப்புகள் போலவே இதுலயும் உங்க ப்ரசண்டேஷன் நல்லா இருக்கு.நன்றியும் வாழ்த்துக்களும்.