பொட்டுக்கடலை பாயசம்

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சாதிகா அவர்கள் வழங்கியுள்ள பொட்டுக்கடலை பாயசம் என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சாதிகா அவர்களுக்கு நன்றிகள்.

 

பொட்டுக்கடலை - ஒரு கப்
தேங்காய் - ஒரு மூடி
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய்ப் பொடி - கால் தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - தலா 5
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - சிட்டிகை


 

மிக்ஸியில் பொட்டுக்கடலையைப் போட்டு நைஸாக அரைத்துச் சலித்துக் கொள்ளவும்.
தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் என்று தனித்தனியாக‌ எடுத்துக் கொள்ளவும்.
மூன்றாம் பாலில் பொட்டுக்கடலை மாவைப் போட்டு கட்டிகளில்லாமல் கரைத்து, அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அடுப்பில் வைத்து கரண்டியால் கைவிடாமல் கிளறவும். (இல்லையெனில் கட்டிகளாகிவிடும்).
பொட்டுக்கடலை மாவு வெந்ததும் இரண்டாம் பால் மற்றும் முதல் பால் ஊற்றிக் கிளறவும்.
அதனுடன் உப்பு, சர்க்கரை மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்க்கவும்.
பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுலபமாக செய்யக்கூடிய, சத்துமிக்கச் சுவையான பொட்டுக்கடலை பாயசம் ரெடி.

விரும்பினால் 2 மேசைக்கரண்டி அளவு கன்டண்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Nice. Pottukadalai smell varadha??

இன்றைய சமையல் ராணி திருமதி. பாலநாயகி அவர்களுக்கு வாழ்த்துகள்.. உங்கள் அனைத்து குறிப்புகள் சூப்பரா இருக்கு. ஒவ்வொரு படமும் அழகாக உள்ளது. வாழ்த்துகள் ராணி அவர்களே..

அட்மினுக்கு மிக்க‌ நன்றி. ஊக்க‌ படுத்திய‌ வனி அக்காவிற்கு மிக்க‌ நன்றி.

எல்லாம் சில‌ காலம்.....

thanks ஆயிஷா. பொட்டுகடலை வாசம் தேங்காய் பால் கூட‌ சேர்ந்து சூப்பரா இருந்துச்சி. எங்க‌ வீட்ல‌ எல்லாருக்கும் பிடிச்சி இருந்துச்சி. நீங்களும் செய்து பாருங்க. இந்த‌ குறிப்பை முதலில் சொன்ன‌ சாதிகாவிற்கு நன்றி. அருமையான‌ குறிப்பு.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க் யூ சோ மச் நிஷா.

எல்லாம் சில‌ காலம்.....

வாவ் பொட்டுக்கடலையில் பாயசமா வித்யாசமா பார்க்கவே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாயாசம் சூப்பர்ப்பா! எல்லா ரெசிபியும் அழகாக‌ செய்து காட்டியிருக்கீங்க‌. முதல் அனுபவம் மாதிரியே இல்ல‌. கலக்குங்க‌ பாலநாயகிகிகி.
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

வாழ்த்துக்கள்,எல்லா குறிப்பும் அருமை.பாயசம் சூப்பர்.பளீச் படம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கும் இதான் first time. ஆனா சூப்பரா இருந்துச்சி. வீட்ல‌ எல்லாரும் பாராட்னாங்க‌. சாதிகாக்கு தான் எல்லாரும் விஷ் பண்ணனும். அவங்க‌ தான் வித்யாசமா யோசிச்சி இருக்காங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

தேங்க் யூ சோ மச். மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

thank u so much

எல்லாம் சில‌ காலம்.....

பொட்டுக்கடலை பாயசம் செய்தேன்,ஈசி அன்ட் சூப்பர்.
சீனிக்கு பதிலாக‌ வெல்லம் சேர்த்து செய்தேன் டேஸ்ட் அருமை.
நீங்கள் கிச்சன் குயினாக‌ தேர்ந்தெடுக்கபட்டதுக்கு வாழ்த்துக்கள்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நன்றி சுபி. ஆனால் பாராட்டு எல்லாம் சாதிகாவிற்கு தான். இது அவங்களோட‌ ரெசிபி. once again thank u subi

எல்லாம் சில‌ காலம்.....