நண்டு மசாலா குழம்பு

தேதி: December 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

நண்டு - 6
தயிர் - ஒரு கப்
கடுகு - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
மசாலா பொருட்கள் அரைப்பதற்கு:
தேங்காய் - கால் மூடி
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - ஒன்று
இஞ்சி - ஒன்றரை அங்குலத் துண்டு
பச்சை மிளகாய் - 8
சீரகம் - ஒன்றரை தேக்கரண்டி
மிளகு ‍‍- 5 (விருப்ப‌ப்பட்டால்)
கொத்தமல்லித் தழை - ஒரு கட்டு
புதினா - சிறிதளவு


 

நண்டின் பின்புற ஓடு மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கிவிட்டு சுத்தம் செய்து எடுத்துத் தயிருடன் கலந்து ஊற வைக்கவும்.
அரைப்பதற்கு கொடுத்துள்ள மசாலாப் பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அரை மூடி தேங்காயைத் துருவி, பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்தவுடன் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிட்டு, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
பிறகு தயிருடன் ஊற வைத்த நண்டைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக‌விடவும்.
வெந்தவுடன் தேங்காய்ப் பாலை ஊற்றி லேசாக கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
அருமையான சுவையுடன், வித்தியாசமான‌ நண்டு மசாலா குழம்பு ரெடி.

கடைசியாக‌ தேங்காய் பால் ஊற்றாமல் சற்று கெட்டியாக க்ரேவியாகவும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நண்டு மசாலா சூப்பர்.. பார்க்கும் போதே சாப்பிடனும் தோணுது. எங்க அப்பா மலைக்கு போயிருக்கார். சோ சாமி கண்ணை குத்திடும். வாழ்த்துகள் பாலநாயகி. அனைத்து படங்களும் சூப்பர். 6 குறிப்பும் பட்டையை கிளப்புது. வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

டிஷ் கலரே அட்டகாசமா இருக்கு.. நண்டு வாங்கின‌ உடனே செய்ய‌ போறேன் இந்த‌ முறைல‌ :)

"எல்லாம் நன்மைக்கே"

கலர்ஃபுல் டிஷ்...
எல்லா குறிப்புகளுமே அருமையாக‌ இருக்கு, படங்களும் சூப்பருங்க‌...
வாழ்த்துகள்!

வாழ்த்துக்கள்ப்பா, நண்டு மசாலா கலர்ஃபுல்லா இருக்குப்பா, நாக்கில‌ எச்சில் ஊறுது ஆனால் நான் இதுவரை நண்டே சாப்பிட்டது கிடையாதுப்பா,

அடடா அடடா ஜொலிக்குதே முகப்பு கலரா ஜொலிக்குதே
கிச்சன் குயினும் ஜொலிக்கிறாறே..

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌. நான் சொல்ல மறந்தது விட்டது எல்லாம் கரெக்டா பாத்து போட்டு வாழ்த்துகளும் சொன்னதுக்கு ரொம்ப‌ ரொம்ப‌ தேங்க்ஸ். தேங்க் யூ சோ மச். குறிப்பு உங்களோடது. குறிப்ப‌ குடுத்து செய்து காட்னதுக்கு பாராட்டும் கிட்சன் குயின் பட்டமும் குடுத்து அசத்துறீங்க‌. மிக்க‌ நன்றி. நெஞ்சார்ந்த‌ நன்றிகள்.

உண்மையா என்ன‌ இதுல‌ கலந்துக்க‌ உற்சாக‌ படுத்தனது வனி அக்கா மட்டும் தான். தாங்க்ஸ் வனி அக்கா. உங்களையும் சீதா அம்மாவையும் பாத்து தான் எனக்கு இன்ட்ரெஸ்ட் வந்துச்சி. ஆனா குறிப்பு அனுப்பும் வழி தெரியாமல் இருந்தேன். இந்த‌ கிட்சன் குயின் எனக்கு உதவியாக‌ இருந்தது.

என்னோட‌ முதல் முயற்சிக்கே இந்த‌ பாராட்டும் கிட்சன் குயின் பட்டமும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அருசுவை டீம்ல‌ இருக்க‌ அனைவருக்கும் நன்றி.

இந்த‌ கிட்சன் குயின் பட்டம் கிடைத்தது எனக்கு தேசிய‌ விருது வாங்கின‌ மகிழ்ச்சி கிடைக்குது. வீட்டை விட்டு வெளியில் நான் வாங்குகிற‌ முதல் பாராட்டு இது. கண்ல‌ தண்ணீயே வருது. சொல்ல வேற‌ வார்த்தையே இல்லை. தேங்க் யூ சோ மச் டூ ஆல்.

எல்லாம் சில‌ காலம்.....

hai முன்னாள் கிட்சன் குயின். ரொம்ப‌ மகிழ்ச்சியா இருக்கு. மனமார்ந்த‌ நன்றிகள். மலைக்கு போயிட்டு வந்த‌ உடனே செஞ்சி பாருங்க‌. நான் செஞ்சதுல‌ இது வித்யாசமா ரொம்ப‌ நல்லா இருந்துச்சி. முதல் கமென்ட்க்கு ரொம்ப‌ நன்றி.

எல்லாம் சில‌ காலம்.....

thank u so much packialakshmi. கண்டிப்பா செய்து பாருங்க‌. ரொம்ப‌ நல்லா இருந்துச்சி. எல்லா புகழும் அட்மினுக்கே. ஏனா இந்த‌ டிஷ் அவங்களோடது தான்.

எல்லாம் சில‌ காலம்.....

எல்லா புகழும் அட்மினுக்கே. இந்த‌ டிஷ் அவங்களோடது தான்.

எல்லாம் சில‌ காலம்.....

balanayagi அக்கா ரெசிபி டெம்ப்டிங் செம கலர்புல் :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இரண்டு நாளா வந்து வாழ்த்தும் கூட சொல்ல முடியல... இன்னைக்காவது வந்தே ஆகணும்னு வந்துட்டேன் :) முகப்பில் கலர்ஃபுல்லா ஜொலிக்கறீங்க... ஐ லைக் இட். முக்கியமா நண்டு... வாவ்!! நான் நண்டு சாப்பிட்டதும் இல்ல, சமைச்சதும் இல்லை. ஆனா உங்க கடைசி படம் தான் வாழ்த்தை இந்த குறிப்பில் சொல்ல தள்ளிகிட்டு வந்தது.

மனம் நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் பாலா. அழகு... படங்கள் எல்லாம் பளிச்சுன்னு சூப்பரா வந்திருக்கு. இனி என்ன... நாமே கூட குறிப்பு கொடுக்கலாம் தானே ;) அசத்துங்க பாலா.

முகபுத்தகத்தில் இருக்கீங்களா? அங்கே எல்லாரும் வாழ்த்து சொல்லி இருந்தாங்க இன்று.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank you kani

எல்லாம் சில‌ காலம்.....

நான் face book account வைத்து இருப்பது என்னவருக்கு இஷ்டம் இல்லை. அவருக்காக‌ என் முக‌ புத்தகத்தை துறந்து விட்டேன். தேங்க் யூ சோ மச் அக்கா. எல்லா தேங்க்ஸ்ம் உங்களுக்கு தான் சொல்லனும். உங்களால‌ தான் எனக்கு இந்த‌ இன்ட்ரெஸ்ட் வந்துச்சி. எனக்கு ஹெல்ப் பண்ணதும் நீங்க‌ தான். தேங்க் யூ சோ மச்.

எல்லாம் சில‌ காலம்.....