தாய்ப்பால் தயவு செய்து உதவவும்

வணக்கம் தோழியே !!
எனக்கு கடந்த nov மாதம் ஆண் குழந்தை பிறந்து ஒரு மாதம் முடிவடைகிறது. என்னிடம் தாய்ப்பால் குறைவாக இருப்பதால் நான் ஒரு நாளைக்கு 3 முறை nan pro stage 1 formula மில்க் கொடுக்கிறேன். எனது கேள்வி
1. இது போன்று யாரேனும் கொடுத்து உள்ரில்கள? நல்லதா?
2. பால் இல்லை என்றால் பால் powder கொடுகலாமா? யாரேனும் கொடுத்து உள்ரில்கள?
3. nan pro stage 1( nestle company)milk powder or lacto gen no 1 milk powder எதை கொடுகலாம்? இல்லை doctor பொருத்து வேறு வேறு பரிந்துரைபர்கள ? எது சிறந்தது.
4. என் பையன் ஒரு சில முறை formula பால் கொடுத்தால் ஆனைத்தும் வொமிட் செய்து விடுகிறான். இது உங்கள் குழந்தைக்கும் நடந்து உள்ளதா? 5.formula milk எத்தனை மாதங்கள் வரை கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டும்.எப்பொழுது மாட்டு பால் கொடுக்க வேண்டும்.
5. நான் இதுவரை சங்கில் தான் பால் கொடுக்கிறேன். feeding bottle கொடுப்பது சிறந்ததா?யாரேனும் 1 மாத குழந்தைக்கு கொடுத்து உள்ளிர்களா? . பதுகப்பானந்தா ?

தயவு செய்து அனுபவம் உள்ள அனைத்து தாய்மார்களும் கூரவும். என்னை போன்ற மற்ற தாய் கும் நிசையம் பயன் ஆகும். நன்றி

இப்படிக்கு
சரண்யா

எனக்கு 3 மாத குழந்தை உள்ளது. எனக்கும் பால் பற்றாத காரணத்தினால் லேக்டோசன் தருகிறேன்.
1.அதில் கொடுத்துள்ள அளவெல்லாம் ஒத்துவராது. நான் அதன் அளவுப்படி number of spoon and water பிரித்துக்கொண்டேன்.
2.ஒரு company product கொடுக்க ஆரம்பித்தால் அதையேதான் 6 மாதத்திற்கு கொடுக்க வேண்டும்.
3.என் குழந்தை வாமிட் பண்ணவில்லை.மாட்டு்ப்பால் சில குழந்தைகளுக்கு ஒத்துக்காது. ஒரு வருடம் கழித்து தரலாம் என்று என் சிந்தனை. நீங்க டாக்டர்கிட்ட consult பண்ணுங்க..
4.பாலின் தேவை அதிகரிக்கும் பொழுது சங்கு சரிபட்டு வரவில்லை, ஆதலால் 2 ஆம் மாதத்தில் இருந்து பாட்டில் தான்.
5.என்னைப்பொருத்த வரை நான் மேற்கூரியவற்றுல் என் குழந்தை நிறைவாகவே உள்ளது.

hi iceu...enaku 7 months baby iruka..enakum feeding kammiya irunthuchu...baby pirantha 1 month laye formula milkum kalanthu thaan kuturean....en ponnukum nan pro stage 1 thaan kutukurean...onnum payam illa...feeding bottle use pannathengga pa..bottle la milk kutucha pillangga athe fasttla mother milkum varanumnu ethirparpangga...apram mother milk kutika mattangga..neengga. changula ye kutungga athu thaan best.. mother milk increse aaga sapatula garlic athigama serungga..vegetables and small fish neriya saptungga..mother horlicks um morning and evening kutikalam....milk neriya kutingga...cow milk 1 yr apram thaan kutukanumnu sollungga enaku sariya theriyala...

எல்லாம் நன்மைக்கே

நீங்க‌ பால் ஊற‌ நிறைய‌ சாப்பிடுங்க‌, சத்துணவு மாவு இருக்கில்லப்பா அத‌ உருண்டை செய்தோ இல்லை கொழுக்கட்டை செய்தோ சாப்பிடுங்க‌, பால்ல‌ பூண்டு போட்டு குடிங்க‌ நிறைய‌ பூண்டு உணவில் சேத்துக்கோங்க‌, நல்லா பால் ஊறும், நீங்க‌ ஒரு நாளைக்கு 2 தடவை மட்டும் பார்முலா மில்க் கொடுங்க‌, உங்க‌ பாலையே கொடுக்க‌ முயற்சி செய்யுங்க‌, மீன்,முட்டை,கருவாடு,இறைச்சி நிறைய‌ சாப்பிடுங்க‌ அப்ப‌ தான் குழந்தைக்கு எல்லா சத்துக்களும் கிடைக்கும். தாய்ப்பாலே சிறந்துப்பா,
மாட்டுப்பால் 1 வருடம் கழித்து தான் ப்ப்பா கொடுக்கணும்னு எனக்கு டாக்டர் சொன்னாங்க‌, ஏன்னா மாட்டுக்கு உடம்பு சரியில்லனா கூட‌ அந்த‌ பாலை கொடுத்தா குழந்தைக்கு பேதியாகும்.

அப்புறம் பார்முலா மில்க் கொடுக்கும் போது 30 மிலிக்கு 1 ஸ்பூன்னா அத‌ கரெக்டா போட்டு கொடுங்க‌, பவுடர் மீதி ஆனாலும் இல்ல‌ குறைந்தாலும் கூட‌ குழந்தைகளூக்கு வயிற்று பிரச்சனை வரும்.அப்புறம் குழந்தைக்கு உடம்பும் தேறாது.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

இரண்டாவது கேள்விக்கு - பால் போதவில்லையென்பதற்காகவல்ல, தாய் உடல்நலமில்லாமல் இருந்தால் அல்லது வேலைக்குப் போகும் நிர்ப்பந்தத்திலிருந்தால் பால்மா (குழந்தைகளுக்கானது) கொடுப்பது தான் ஒரே வழி. தனியே தாய்ப்பாலில் மட்டும் தங்கியிருக்க முடிவதில்லை. நான் லாக்டோஜன்தான் கொடுத்தேன். 25 வருடத்துக்கு முற்பட்ட காலம் அது. மூத்தவருக்குப் பிரச்சினை இருக்கவில்லை. சின்னவருக்கும் லாக்டோஜனால் பிரச்சினை வரவில்லை. அவர் குறை மாதக் குழந்தை. வேறு உடற் கோளாறுகள் இருந்தன. //அனைத்தும் வொமிட் செய்து விடுகிறான்.// அவருக்கு இந்தப் பிரச்சினை இருந்தது. அனைத்தும் அல்லாவிட்டாலும் 3 அவுன்ஸ் குடித்தால் 2 வெளியே வந்துவிடும். 7 அவுன்ஸ் கொடுத்தால் 6 வெளியே. அவரும் களைத்து நானும் களைத்து விடுவேன். என் முழு நேர வேலையே அவரைப் பராமரிப்பது மட்டும்தான் என்றிருந்தது. அவருக்கு லாக்டோஜன் அலர்ஜி இல்லை. வாந்தி எடுத்தாலும் யோசிக்காமல் தொடர்ந்து பால் கொடுத்துக் கொண்டே இருக்கச் சொன்னார்கள். சின்னவரது பிரச்சினை பல மாதங்கள் நீடித்தது.

//formula milk எத்தனை மாதங்கள் வரை கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டும்.// எந்தத் தயாரிப்பானாலும் பாக்கிங்லயே போட்டு இருப்பாங்க இந்த விபரம் எல்லாம். அது மனதுக்குத் திருப்தியில்லை என்று தோன்றினால்... மிகச் சிறந்த வழி குழந்தையைப் பார்க்கும் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது. குடிக்கும் பாலெல்லாம் வாந்தி எடுக்கும் குழந்தைக்கு இணையத்தில் டாக்டரல்லாத எங்களிடமெல்லாம் அட்வைஸ் எடுத்துக் கவனிப்பது நல்லது என்று நம்புகிறீர்களா நீங்கள்? நாங்கள் எல்லா விபரமும் தெரிந்தவர்கள், தப்பாக எதுவும் சொல்லவே மாட்டோம் என்று நிச்சயம் தெரியுமா உங்களுக்கு! :-) என் குழந்தையின் கதையைச் சொன்னேன். ஆனால் அப்படியே உங்கள் குழந்தையும் இருப்பார் என்று சொல்ல என்னால் முடியாது. குழந்தை வளர்ப்பு விளையாட்டு அல்ல சகோதரி. //அனுபவம் உள்ள அனைத்து தாய்மார்களும் கூரவும்.// ஆள் ஆளுக்கு ஒவ்வொரு அனுபவம் சொல்வோம். அவற்றையெல்லாம் சும்மா கேட்டு வைக்கலாம். குழந்தையைக் கவனிக்கும் வைத்தியரது ஆலோசனை போல வராது எதுவும்.

//எப்பொழுது மாட்டு பால் கொடுக்க வேண்டும்.// 'வேண்டும்' என்னும் கட்டாயம் கிடையவே கிடையாது. நாம் மனிதர். மாட்டுப் பால் கொடுக்கத் தேவையில்லை. விரும்பினால், வசதிப் பட்டால் கொடுக்கலாம். அதற்கு முறைகள் இருக்கின்றன. செறிவைக் குறைக்க வேண்டும். இந்த விடயத்தில் என்னால் உதவ இயலவில்லை. அனுபவமில்லை.

//feeding bottle கொடுப்பது சிறந்ததா?// தாய்ப்பால் சிறந்தது. அதையே ஃபீடிங் பாட்டிலிலும் கொடுக்கலாம். //பதுகப்பானந்தா ?// பாதுகாப்பு... பாட்டிலை விட குழந்தையைப் பராமரிப்பவர், பாட்டில் கழுவும் முறை, பயன்படுத்தும் முறை என்பவற்றில்தான் தங்கியிருக்கிறது.

//யாரேனும் 1 மாத குழந்தைக்கு கொடுத்து உள்ளிர்களா?// நிறையப் பேர் கொடுத்திருப்பார்கள். பிறந்த முதல் நாளே வைத்தியசாலையில் ஃபீடிங் பாட்டிலில் குடித்த குழந்தைகளும் இருக்கிறார்கள். பிரசவத்தின் போது தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் இது ஒன்றுதானே வழி. பிரச்சினை எதுவும் இராது.

வாந்தி பற்றி குழந்தையின் மருத்துவரிடம் கலந்தாலோசித்தீர்களா? அவர் என்ன சொன்னார்! நான் சொன்னது ஒரு புறம் இருக்கட்டும். உங்கள் குழந்தை வேறு. காலம், இடம் எல்லாம்கூட வேறு. டாக்டர் சொல்வதைக் கேட்டு அதன்படி நடவுங்கள்.

‍- இமா க்றிஸ்

முகநூலில் உள்ளது போல் like option இருந்திருந்தால் நான் like கொடுத்திருப்பேன்.. நீங்கள் சொல்வது சரி. குழந்தைக்கு குழந்தை அனைத்தும் மாறுபடும்.

நன்றி சுபாசக்தி. எனக்கு குழத்தை operation (cearian) பணியே எடுத்தார்கள் ஆதலால் hospital 3 days lacto gen milk powder avargale கொடுத்தார்கள். நான் வீட்லே தோழி ஒருவர் சொனத்தால் nan pro stage 1 கொடுக்கிறேன் 1 மதமாக இது சரியா? இதையே தொடரலாமா ?

something is better than nothing.

எனக்கும் சிசேரியன் தான். நானும் இதே போல் தான், hospital ல dexolac கொடுத்தார்கள்..20 நாட்களில் நான் தான் லேக்டோசன் கு மாறுனேன்.. அதுவே தவறு என்று மருத்துவர் கண்டித்தார்.. ஆதலால் தான் மறுபடியும் மாற்ற வேண்டாம்.

imma அவர்களுக்கு

உங்கள் பதிவிற்கு நன்றி. நீங்கள் கூரிய கருத்துகள் நான் ஏற்று கொள்ளகிறேன்.குழந்தைக்கு குழந்தை வேறு படும் என்று ஏற்று கொள்கிறேன். உங்கள் போன்று கூறும் அறிவுரைகளின் மூலம் கேட்டதில் மனதில் இருக்கும் அதிக படியான பயம் நீங்கீயது. நிச்சயம் மருத்துவரிடமும் ஆலோசித்தே செய்வேன். மிகவும் நன்றி.

என் பையன் தாய்ப்பால் அல்லது formula milk எது குடித்தாலும் வாயில் பால் வைத்து கொண்டே இருக்கிறான். மற்றும் 2 நட்களாக முக்கி கொண்டே இருக்கிறான். urin போவதற்கு முன் மிகவும் அழுகிறான் இது எதனால்?

சரண்யா

something is better than nothing.

// இது எதனால்?// எங்களால சொல்ல முடியாதுங்க. சொல்லத் தெரியாம முடியலைன்னு அழுறாங்க பாப்பா. பாவம். ;(( டாக்டர்ட்ட கொண்டு போய்க் காட்டுங்க. இன்ஃபெக்க்ஷன், சமிபாட்டுப் பிரச்சனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வைச்சுட்டு இருக்காதீங்க கண்ணா.

‍- இமா க்றிஸ்

sry for typing in engish.i forgot my username password also.so registered ith a new mail id...i too hav 3 weeks baby now and i couldnt type in tamil right now.plz excuse.

1) dont aim to giv formula milk to your cutie pie...
2) ur baby is just a month old and u must e knowing breast milk has anti oxidants which formula milk lacks.

my reply is based on the assumption that if u could revive ur supply, u ld lov to breast feed your baby and stop formula.

ur milk supply is reduced bse ur baby was not allowed to latch with you in the first three days...hope baby had latching issues afterwards and which eventually reduced your milk supply.so u r misleaded to formula gimmicks.

first recommendation: if u could consult your pediatrician and enquire if there are any latch consultant in your area.they will help you re lactate to your baby and stop formula milk.

second: it is you who should take the responsibility. first offer your breasts to baby often.there are lot of videos available in YouTube to show how to latch the baby.since he is used to formmula feeding now,he may resist and cry.but make him to suck.
get a breast pump - manual (phillips avent- i hav) and try to express milk from your breast and feed the baby.initially you ll pump little only.but keep trying.being a mmonth old mom, you could easily breast feed your baby with some effort. ( i know mom who re lactated after a year also... so hav hope and determination that you should increase your supply and breastfeed your loved one :-)
i hav mailed many links to admin.i reallly dont find time to explain in detail otherwise i would lov to do..
admin teamm -- plz mail her or you plz contact admin team and get those links.

all the best and start lactating mammma :-)
admin plz forward it to her.i really dont find time to explain in detaill.

i know i hav answered none of your questions.its upto you to decide and hope i hav not hurt any feelings here.just trying to giv some info :-)

மேலும் சில பதிவுகள்