தேங்காய் மிளகு நண்டு

தேதி: December 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

நண்டு - 2
மிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - கால் தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
சோம்பு - சிறிது
உப்பு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி


 

நண்டைச் சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைக்கவும்.
வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்துக் எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் ஊற வைத்த நண்டைச் சேர்த்து பிரட்டவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும். வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும்.
சுவையான தேங்காய் மிளகு வறுத்து அரைத்த நண்டு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயீன் அன்னியே எல்லாமே சூப்பராயிருக்கு பார்க்க அழகாயிருக்கு ருசியாவும் இருக்கும்னு நினைக்கிரேன்.கன்டிப்பா நான் ட்ரை பன்ரேன்.வாழ்த்துக்கள்

super. kalakkala irukku. vazhthukkal kitchen queen. neenga eppavume kalakal thanu enaku theriyum. congrats

எல்லாம் சில‌ காலம்.....

இன்றைய‌ கிச்சன் குயின் எங்கள் செண்பகா அண்ணிக்கு என் வாழ்த்துக்கள். எல்லாக் குறிப்பும் அருமை. படங்கள் பளிச் பளிச்.. வாழ்த்துக்கள் அண்ணி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

நண்டு சூப்பராருக்கு செண்பகா, தேர்வு செய்த‌ குறிப்புகள் அனைத்தும் அருமை செண்பகா, படங்கள் அனைத்தும் மின்னுகின்றன‌.

அண்ணா செண்பகாவுக்கு கைக்கு வளையல் தானே,( அது தங்கமோ, வைரமோ )

எதுவா இருந்தாலும் உங்களுக்கு ஓகே தானே செண்பகா? வாழ்த்துக்கள்ப்பா.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

தேங்காய் மிளகு நண்டு சூப்பரா இருக்கு.கிச்சின் குயினுக்கு வாழ்த்துக்கள்.

தாங்ஸ் நிஷா எல்லா குறிப்பும் நல்லா இருந்துச்சு நீங்களும் ட்ரை பன்னுங்க. எப்படி இருந்துச்சுன்னும் சொல்லுங்க.
பாலநாயகி ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி சுமி
ரொம்ப நன்றி ஹேமா. எதுவா இருந்தாலும்(தங்கமோ, வைரமோ) எனக்கு ஓகே தான் ஹேமா.
ரொம்ப நன்றி தர்ஷா