வெஜ் சாகு

தேதி: December 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

திருமதி. விஜி அவர்கள் வழங்கியுள்ள வெஜ் சாகு என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்கள் செய்து, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய விஜி அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - ஒன்று
கேரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பீன்ஸ் - சிறிது
அரைக்க:
தேங்காய் - கால் கப்
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
பச்சை மிளாகாய் - 2
மிளகு - கால் தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
புளி - சிறிது
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைகேற்ப


 

காய்கறிகளை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காய்கறிகளுடன் உப்பு போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். வேக வைத்த காய்கறிகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைப் போட்டு தாளித்து, தேங்காய் விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி மூடி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டியாக ஆனதும் வெந்த காய்கறிகளைப் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும்.
சுவையான வெஜ் சாகு ரெடி. கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சப்பாத்தி, பூரி, தோசையுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

இது கோவாவில் செய்யக் கூடிய சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் பிரபா. நானும் இப்படிதான் செய்வேன். இடியாப்பம்க்கு சூப்பரா இருக்கும் . வாழ்த்துக்கள் கிச்சன்குயின்.

Be simple be sample

எல்லா குறிப்புகளுமே செமயா இருக்குங்க‌. எளிமை எளிமை!
நன்றி!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

குறிப்பு கொடுத்த விஜிக்கு அவர்களுக்கு நன்றிகள்

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

நன்றி ரேவ்ஸ்,ஆமாம்பா குருமா ரெம்ப சுவைதான்:)

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.

நன்றி மெர்சி:)

வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.