தேதி: December 23, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஏ. பவானி அவர்கள் வழங்கியுள்ள காராமணி பகோடா என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பவானி அவர்களுக்கு நன்றிகள்.
காராமணி - 250 கிராம்
ரவா - 2 தேக்கரண்டி
கடலை மாவு - 125 கிராம்
சின்ன வெங்காயம் - 15
பச்சை மிளகாய் - 2
சோம்பு - ஒரு சிட்டிகை
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 4 பற்கள்
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
எண்ணெய் - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் மல்லித் தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காராமணியில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

காராமணி நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரரப்பாக அரைக்கவும்.

அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித் தழை, சோம்பு, கடலை மாவு, ரவா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு மேசைக்கரண்டி அளவு எண்ணெயை எடுத்து மாவுக் கலவையில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

பிறகு மாவை சிறிது சிறிதாக எடுத்து கிள்ளி எண்ணெயில் போட்டு, சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

க்ரிஸ்பி & டேஸ்டி காராமணி பக்கோடா ரெடி. சாஸுடன் பரிமாறவும்.

Comments
பிரபா
ஐ லவ் திஸ் பக்கோடா... செய்துட்டு படங்காட்டுறேன் ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பக்கோடா அருமையா இருக்கு.
பக்கோடா அருமையா இருக்கு. பார்க்கற அப்பவே க்றிஸ்பியா சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.
எல்லாம் சில காலம்.....
bavani
குறிப்பினை கொடுத்த பவானி அவர்களுக்கு நன்றி,சுவை ரொம்ப நல்லாருந்தது:)
வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.
vani
செய்து படங்காட்டுங்க,பார்க ஆவலாருக்கேன்:)
வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.
balanayagi
நன்றி பாலாநாயகி:)
வாழ்ந்து மறையாதே,
மறைந்தும் வாழ்ந்திரு.
பிரியமுடன்
பிரபா.