தாய்லாந்து வெள்ளரி சாலட்

தேதி: December 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

திருமதி. தேவா அவர்கள் வழங்கியுள்ள தாய்லாந்து வெள்ளரிக்காய் சாலட் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தேவா அவர்களுக்கு நன்றிகள்.

 

பெரிய வெள்ளரிக்காய் - ஒன்று
சாலட் வெங்காயம் (அ) பெரிய வெங்காயம் - ஒன்று
சிகப்பு குடை மிளகாய் - ஒன்று
சீனி - ஒன்றரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி (அ) லெமன் ஜுஸ் - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - 2 தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து வினிகர், சீனி மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்துக் கிளறவும். சீனி நன்கு கரைந்து சாஸ் போல வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, சாஸைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காயை விருப்பமான வடிவில் நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை வட்டமாக நறுக்கி வைக்கவும். குடைமிளகாயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு தட்டில் நறுக்கிய வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் குடைமிளகாயை வைத்து, அதன் மீது சாஸை ஊற்றி கலந்து, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்ற சாலட் ரெடி.

தாய்லாந்து உணவு வகைகளில் சாஸிற்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இந்த சாலட்டை இறால் ஃபிரிட்டர்ஸுடன் சாப்பிட நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால் இத்துடன் நிலக்கடலையும் (Peanut) சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தாய்லாந்து வெள்ளரி சாலட் குறிப்பினை கொடுத்த‌ திருமதி. தேவா அவர்களுக்கு எனது நன்றிகள். செய்வதற்க்கு ரொம்ப‌ சுலபமாக‌ இருந்தது...டேஸ்ட்டும் நல்லா இருந்தது..:) மீண்டும் எனது நன்றிகள்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

செய்முறை ரொம்ப ஈசியா இருக்கு.. பார்க்கவும் படங்கள் பளீச்சின்னு இருக்கு.. சூப்பர் அம்மிணி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்க‌ பதிவுக்கும் பாராட்டுக்கும் எனது நன்றி.. ட்ரை செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌ ரேவ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கலர்ஃபுல் & ஹெல்தி டிஷ் சூப்பர் சுமி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் சாப்பிடும் ஒரே டிஷ் சுவா..;) வாழ்த்துக்கு நன்றீ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....