கேக்!! பிளண்டர் இல்லை

கேக் செய்வதற்கு கலக்குவதற்கு பிளண்டர் இல்லை மிக்ஸியில் போட்டு கலக்கலாமா? முதல் முறையாக செய்யபோகிறேன் அப்படியே மாவு மற்ற பொருட்களின் விகிதம் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதையும் கூறுங்கள்..

please tell me....

please clear my doubt

மிக்ஸின்னு நீங்க எதைச் சொல்றீங்கன்னு தெரியல. ப்ளெண்டர்னு எதைச் சொல்றீங்கன்னும் புரியல. நான் வேற மாதிரி சொல்லுவேன். :-)

கேக் மிக்ஸர் / பீட்டர் செட் இல்லாம அழகாவே கேக் பண்ணலாமே! உண்மையில் அதுல்லாம் அவசியமே இல்லை. இருந்தால் சுலபம், அவ்வளவுதான்.

முட்டை அடிக்க, கம்பிகளால் ஆன ஹான்ட் பீட்டர் இருந்தால் நல்லது. அல்லாவிட்டால் முள்ளுக்கரண்டி பயன்படுத்தலாம். பட்டர் & சீனி கலந்து அடிக்க உலர்ந்த சுத்தமான மரக்கரண்டி போதும். அதற்குப் பிறகு மாவு சேர்க்க ஆரம்பிக்கும் ஸ்டேஜுக்குப் பின்னால விரல்களாலே கலக்கலாம். சூப்பராக மெத்தென்று வரும்.

//மாவு மற்ற பொருட்களின் விகிதம் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதையும் கூறுங்கள்..// அதுக்கு நீங்க என்ன கேக் செய்யப் போறீங்கன்னு தெரியணும் முதல்ல. ஆனால்... விகிதம் சொன்ன பின்னால எப்புடி செய்றதுன்னும் கேட்பீங்க. :-) முதல்ல இங்க கேக் செக்க்ஷன்ல ( http://www.arusuvai.com/tamil/recipes/48 ) உள்ள ரெஸ்சிபி எல்லாம் படிங்க. எது புடிக்குதோ பண்ணிப் பாருங்க. சந்தேகம்லாம் அந்தந்தக் குறிப்பின் கீழ கேழுங்க.

‍- இமா க்றிஸ்

நன்றி இமாம்மா இப்போ புரிஞ்சுகிடேன்.செய்துப்பார்த்துவிட்டு சொல்கிறேன்..

மேலும் சில பதிவுகள்