பேச்சுலர்ஸ் ரவை கிச்சிடி

தேதி: December 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. மனோகரி அவர்கள் வழங்கியுள்ள பேச்சுலர்ஸ் ரவை கிச்சிடி என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மனோகரி அவர்களுக்கு நன்றிகள்.

 

ரவை - 2 கப்
ஃபுரோஜன் காய்கறி - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
டால்டா - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் - ஒன்று
உப்புத் தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி


 

பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, ரவையை வறுத்தெடுத்து வைக்கவும்.
வாணலியில் டால்டாவையும் எண்ணெயையும் கலந்து ஊற்றி, சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வறுக்கவும்.
பிறகு வெங்காயம், இஞ்சியைப் போட்டு சிவக்க வதக்கி, தக்காளி, சாம்பார் பொடி மற்றும் உப்புத் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் காய்கறி மற்றும் கொத்தமல்லித் தழையைப் போட்டுக் கிளறி, மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்தவுடன் தீயைக் குறைத்துவிட்டு சிறிது சிறிதாக ரவையைத் தூவவும். பிறகு எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு, 5 நிமிடங்கள் சிம்மில் வைத்திருந்து இறக்கிவிடவும்.
சுவையான ரவை கிச்சடி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்