சம்பா ரவை பொங்கல்

தேதி: December 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

சம்பா ரவை - ஒரு கப்
பாசிப்பருப்பு - முக்கால் கப்
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கீற்று
நெய் (அ) எண்ணெய் தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் சம்பா ரவையுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து, 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், சீரகம், மிளகு சேர்த்து தாளிக்கவும்.
பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வதங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
வேக வைத்த சம்பா ரவை, பாசிப்பருப்புடன் தாளித்தவற்றைக் கொட்டி நன்றாகக் கிளறவும்.
சுவையான சம்பா ரவை பொங்கல் தயார். விருப்பப்பட்டால் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.

இதனை சூடாக சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.

டயட்டில் இருப்பவர்களுக்கு, சர்க்கரை வியாதிக்காரர்களுக்கும் இந்த பொங்கல் மிகவும் நல்ல பலனளிக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையான சம்பா ரவை பொங்கல் டேஸ்ட் சூப்பரா இருக்குன்னு நினைக்கிறேன்.. அருமைங்க வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சம்பா ரவை பொங்கல் அருமைங்க‌.. வாசனை இங்க‌ வரைக்கும் வந்திருச்சு.. வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஹெல்த்தி பொங்கல்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க கருத்துக்கு ரொம்ப தாங்ஸ் .இது என்னோட முதல் குறிப்பு. நீங்க ட்ரை பண்ணி பார்த்துட்டு கமன்ட்ஸ் கொடுங்க.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Healthy recipe , my mother in law used to make this.

Your presentation is wonderful, congrats for the first recipe, keep going :))

முதல் குறிப்பு ஜோரா இருக்கு... எல்லாரும் கை தேர்ந்த ஃபோட்டோக்ராஃபர் போல படம் போடுறீங்கப்பா இப்பலாம். ஆசையா இருக்கு, செய்து பார்க்க. செய்துட்டு கண்டிப்பா சொல்றேன். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா