லாங் பீன்ஸ் மசாலா

தேதி: December 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

லாங் பீன்ஸ் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 5 பற்கள்
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - அரை கப்
கொத்தமல்லி, புதினா - சிறிது
பட்டை, லவங்கம், ஏலக்காய், எண்ணெய் - தாளிக்க
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - சிறிது


 

வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கைத் தோல் சீவிவிட்டு நறுக்கி வைக்கவும். லாங் பீன்ஸையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை அரைத்து அல்லது தட்டி வைக்கவும். தக்காளியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
லாங் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்குடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி விழுதை ஊற்றி நன்றாக வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்துப் பிரட்டவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பச்சை வாசம் போக கொதிக்கவிடவும்.
கொதித்ததும் வேக வைத்த காய்களைச் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக தேங்காய்ப் பால், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான லாங் பீன்ஸ் மசாலா தயார். இது சப்பாத்தி, ஆப்பம், இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

சப்பாத்திக்கு செய்யும் போது தேங்காய் பாலாக ஊற்றாமல், தேங்காயை அரைத்து ஊற்றலாம். முந்திரியை ஊற வைத்து சேர்த்து அரைத்தும் ஊற்றலாம். திக்கான குருமாவாக சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.

தேங்காய்ப் பால் சேர்க்கும் போது சற்று நீர்க்க இட்லி, தோசை, ஆப்பத்துக்கு ஏற்றது போல இருக்கும். வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்காமல் அரைத்துச் சேர்த்தும் வதக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

லாங் பீன்ஸ் மசாலா அருமையா இருக்கு. படங்கள் அனைத்தும் சூப்பரா இருக்கு. வாழ்த்துகள் வனி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Super dish akka
Today i will dry it
Beans poriyal enaku pitikavae pitikathu
But entha pottato and peans masala curry
Enaku rompa pitijiruku

Seithu parthutu vanthu pathivai poturaen

ML

லாங் பீன்ஸ் மசாலா அருமை. செய்முறை ஈசியா இருக்கு.ட்ரை செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி
லாங் பீன்ஸ் மசாலா, உங்களோட‌ தக்காளி குருமா மாதிரி எனக்கு ரொம்பவும் யூஸ்ஃபுல்லான‌ குறிப்பு. கட்டாயம் நல்லாருக்கும்னு தெரியுது. இரவு நேர உணவுக்கு ஈசியா செய்யறாப்பல‌ இருக்கு.
லாங் பீன்ஸ் எப்போதாவது தான் கிடைக்கும். கிடைக்கும் போது கட்டாயம் செய்து பார்ப்பேன் வனி:)

வனி ,
வித்தியாசமான காம்போ
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கருத்து தெரிவித்த ரேவதி, கல்யாணி, சுமி, நிகி, கவிதா அனைவருக்கும் மிக்க நன்றி :) அவசியம் செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க தோழிகளே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா