பச்சை ஸ்மூதி

தேதி: December 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் பச்சை ஸ்மூதி என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

பாலக் கீரை - ஒரு கப்
அன்னாசிப்பழம் - அரை கப்
வாழைப்பழம் - ஒன்று (சிறியது)
கெட்டி புளிக்காத தயிர் - ஒரு கப்
ஆரஞ்சு ஜூஸ் - 2 கப்
ஐஸ் கட்டி - 3 - 5 (விரும்பினால்)


 

தேவையான‌ பொருட்களைத் தயாராக‌ எடுத்து வைக்கவும்.
பாலக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
அன்னாசி பழத்தை தோல் சீவி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பிறகு வாழைப்பழத்துடன் மற்ற அனைத்தையும் சேர்த்து, மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ளவும்.
வெயில் நேரத்திற்கு சுவையான குளுகுளு பானம் தயார். சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை. தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

healthyஆன‌ சுவையான‌ சூப்பர் ஸ்மூத்தி. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

வாழ்த்துகளுக்கு நன்றி பாலநாயகி.

அன்புடன்
பாரதி வெங்கட்