தேதி: December 30, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வத்சலா அவர்களின் கோவா முளைகட்டிய பயறு சாலட் என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வத்சலா அவர்களுக்கு நன்றிகள்.
கோவா (முட்டைக்கோஸ்) - அரை கப்
முளைக்கட்டிய பயறு - ஒரு கப்
துருவிய கேரட் - அரை கப்
துருவிய மாங்காய் - அரை கப்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
கோஸ், கேரட், வெள்ளரி மற்றும் மாங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கவும்.

ஒரு பவுலில் முளைக்கட்டிய பயறு, பச்சை மிளகாய், துருவிய கேரட், மாங்காய், கோஸ் மற்றும் கொத்தமல்லித் தழையை போடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தை பொரித்து இதனுடன் சேர்க்கவும்.

இறுதியாக தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

சுவையான கோவா முளைக்கட்டிய பயறு சாலட் தயார்.

இந்த சாலட் டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லது. விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
Comments
பாக்கியா
ஹெல்தியான டிஷ். வாழ்த்துக்கள். நல்லா செய்து இருக்கீங்க.
எல்லாம் சில காலம்.....