தேதி: December 30, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் லெமன் பிஷ் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.
ஃபிஷ் பில்லட் - 2
சோள மாவு - கால் கப்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
லெமன் ஜெஸ்ட் (எலுமிச்சையின் மேல் தோல்) - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பார்ஸ்லே இலை - அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு
மீனைச் சுத்தம் செய்து ஒரு டிஷ்யூ பேப்பரால் ஈரப்பதத்தை ஒற்றி எடுக்கவும். பிறகு சிறிதளவு உப்பு தூவி தனியாக வைத்திருக்கவும்.

சோள மாவுடன் தேவையான அளவு உப்பு (ஏற்கனவே மீனில் சிறிதளவு உப்பு சேர்த்துள்ளோம்). மிளகுத் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

பெரிய பானில் வெண்ணெய் போட்டு உருக்கி, மீனை மாவில் பிரட்டி எடுத்து பானில் போடவும்.

2 நிமிடங்கள் கழித்து மீனின் மேல் சிறிதளவு லெமன் ஜெஸ்ட் தூவி, எலுமிச்சை சாற்றையும் ஊற்றி மேலும் 2 நிமிடங்கள் வேகவிட்டு திருப்பி போடவும்.

மேலும் 4 நிமிடங்களானதும் இறக்கி பார்ஸ்லே தூவி பரிமாறவும்.
