சில்லி மட்டன் வறுவல்

தேதி: December 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

ஆட்டு இறைச்சி - அரை கிலோ
மிளகாய்த் தூள் - அரை மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
உருளைக்கிழங்கு - கால் கிலோ
மஞ்சள் துள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 50 கிராம்
பூண்டு - 5 பற்கள்
வெங்காயம் - அரை கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
வினிகர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - சிறிது


 

பூண்டைத் தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கைச் சிறிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், வினிகர் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இறைச்சியை நன்கு சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த இறைச்சியைச் சேர்க்கவும்.
அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து, உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.
கலவை கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். சுவையான சில்லி மட்டன் வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் வறுவல்ங்கோ.. இங்கே கொஞ்சம் பார்சல்.. ஊசி போய் அனுப்ப கூடாது. இங்கே வந்து செய்துகொடுக்கனும்.. சூப்பர் ரேவா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அருமை..அருமை.. சில்லி மட்டன் வறுவல் பார்க்கவே சூப்பரா இருக்கு.ட்ரை பண்ணிடுவோம்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சூப்பரு சூப்பரு... படங்கள் முன்புக்கு இப்போ ரொம்பவே இம்ப்ரூவ் ஆகி இருக்கு ;) கிச்சன் குயின் இதுக்கு கூட யூஸ் ஆகுது போலயே. மீண்டும் மகுடம் சூடும் ரேவ்ஸ்க்கு வாழ்த்துக்கள். அந்த பாத்திரங்கள் மட்டும் ப்ளாஸ்டிக் பயன்படுத்துங்க ரேவ்ஸ், க்ளேர் அடிக்காம படம் இன்னும் தெளிவு கிடைக்கும் :) எல்லா குறிப்பும் அருமையா இருக்கு... சூப்பர்.

இப்ப தான் நினைவு வருது, ரெடி ஸ்டெடி க்ளிக்ல சந்தேகம் கேட்டீங்க, சாரி கொஞ்சம் பிசியாவே போறதால மறந்து போறேன். கட்டாயம் பொறுமையா படிச்சு பதில் போடுறேன் ரேவ்ஸ். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரேவ் அம்புட்டு நல்லவங்களா நீங்க. நானே என் கையால செய்துகுடுக்கறேன் உங்களுக்கு. ஊசி போபனதுகூட இல்ல. வீட்டுல. தான்க்யூ

Be simple be sample

செய்துபாருங்க சுமி. டேஸ்ட் நல்லாருந்தது தான்க்யூ சுமி

Be simple be sample

தான்க்யூ வனி. ம்ம்ம் நீங்க சொன்னதுலாம் மைண்ட்ல வச்சுருக்கேன் வனி. பொறுமையா ஆன்சர் பண்ணுங்க. நானும் இப்ப கேமராவை இப்பதான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.

Be simple be sample

சில்லி மட்டன் வறுவல் கலக்குது போங்க :) நீங்க பைனல் போட்டோக்கு ப்ளாஸ்டிக் பவுல்ஸ் யூஸ் பன்னுங்க ரேவா எவர்சில்வர் க்ளார் அடிக்கும் சமயத்துல.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கள். கலக்கலா இருக்கு. அது என்ன‌ சின்னோன்டு கிண்ணத்துல‌ கொஞ்சூண்டு குடுக்கறீங்க‌. உங்களுக்கு மட்டுமா? எங்களுக்கும் நிறைய‌ செய்து குடுங்க‌. ட்க்கு ட்க்குனு கிட்சன் குயின் ஆகிட்டே போறீங்க‌. உங்க‌ ஸ்பீடு தாங்கல‌. எக்ஸ்ப்ரஸ் தான் நீங்க‌ போங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....