மலேஷிய கீரைப் பிரட்டல்

தேதி: December 31, 2014

பரிமாறும் அளவு: 1 - 2 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தேவா அவர்கள் வழங்கியுள்ள மலேஷிய கீரைப் பிரட்டல் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தேவா அவர்களுக்கு நன்றிகள்.

 

கீரை (Bak Choi, Choi Sum, முளைக்கீரை அல்லது ஸ்பினாச்) - ஒரு கட்டு
பூண்டு - 3 பற்கள்
எண்ணெய் - கால் மேசைக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கீரையைக் கழுவி நீரை வடியவிட்டு, பெரிதாக நறுக்கி வைக்கவும்.
பூண்டைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியைக் காய வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டைப் போட்டு 30 விநாடிகள் வதக்கவும்.
அதனுடன் கீரையைச் சேர்த்து, சோயா சாஸையும் ஊற்றி, ஒரு தட்டுப் போட்டு மூடி 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
மலேஷிய கீரைப் பிரட்டல் தயார்.

மிகவும் எளிதான, சுவையான, சத்தான சமையல் இது. சோயா சாஸ் சேர்ப்பதால் உப்பு சேர்க்கத் தேவையில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான கீரை பிரட்டல் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கீரைப் பிரட்டல் சூப்பர். மூன்றாவது படம் ரொம்ப‌ அழகு, பூண்டை இவ்வளவு பொடியாக‌ நறுக்க‌ முடியும்னு இன்னிக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன் இமாம்மா...;) வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வித்தியாசமாகத் தெரிந்தாலும் சுவை... சூப்பர் சுவர்ணா. ஆரோக்கியமான சமையல் & என் நாவுக்குப் பிடித்த சுவை. நிச்சயம் விதம் விதமான கீரைகளை இந்த முறையில் அடிக்கடி சமைக்கப் போகிறேன். குறிப்பைக் கொடுத்த தேவாவுக்கு என் அன்பு நன்றிகள்.

//பூண்டை இவ்வளவு பொடியாக‌ நறுக்க‌// குறிப்பில் பொடியாகத்தான் நறுக்கச் சொல்லி இருந்தாங்க. ஹர்ப் சாப் பண்ற போர்ட்ல பொடியாக நறுக்குவது சுவாரசியமாக இருந்துது. :-)

‍- இமா க்றிஸ்

herb chopping board க்யூட்!! :)

அன்புடன்,
மகி

அந்த சாப்பிங் போர்டு ரொம்ப அழகு.

அன்புடன்
பாரதி வெங்கட்

கீரையைப் பார்க்காம போர்ட் படம் மட்டும் பார்த்த 2 பேருக்கும் நங். ;)

‍- இமா க்றிஸ்

வலிகலேயே, வலிகலேயே. நான் மோதிர கையாளல குட்டு வாங்கி இருக்கிறேன். கீரை செய்முறை வித்தியாசமா இருக்கு ,கடைசி பிளேட் பிரசென்டேசன் அழகு.அப்போ நிச்சயம் சுவையும் ரொம்ப நல்லா இருக்கும்னு நினைக்கிறன். கண்டிப்பா ட்ரை பண்றேன். இப்போ சொல்லலாமா, அந்த சாப்பிங் போர்ட் ரொம்ப ரொம்ப அழகு.

அன்புடன்
பாரதி வெங்கட்