ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 3

தேதி: December 31, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பேக் செய்து வைத்துள்ள வீட்டிற்கான பகுதிகள்
ராயல் ஐஸிங்
உபகரணங்கள் :
ட்ரே - 30 செ.மீ x 40 செ.மீ
பைப்பிங் பாக்
ஐஸிங் டிப் இல. - 1
ஐஸிங் டிப் இல. - 4
ஐஸிங் டிப் இல. - 27
இடுக்கி
பேஸ்ட்ரி ப்ரஷ்
மெல்லிய தகடு கொண்ட கூரான கத்தி
ஐசிங் சுகர் ஷேக்கர்
சிறிய சதுர ட்ரே அல்லது உறுதியான அட்டைப் பெட்டி - ஒன்று
டீ டவல்


 

பேக் செய்த ஜிஞ்சர் ப்ரெட் மனிதர்களை அலங்கரித்து காய வைக்கவும். பேக்கிங் துண்டுகள் அனைத்திலுமுள்ள உலர்ந்த மாவை ப்ரஷ்ஷால் துடைத்து வைக்கவும்.
சுவருக்கான துண்டு ஒன்றின் இரண்டு ஓரங்களில் நீளமாக ஐஸிங் (டிப் 27) பைப் செய்யவும். வீட்டு முகப்புக்கான ஒரு துண்டில் பொருத்தமாக பக்கத்திலும் கீழ்ப் பக்கத்திலும் ஐஸிங் பைப் செய்து காட்டியுள்ளவாறு பொருத்தி ஒட்டவும். சிறிது நேரம் அசையாமல் பிடித்திருக்க வேண்டியிருக்கும். (ட்ரேயின் ஒரு மூலையிலிருந்து ஆரம்பித்த காரணங்கள் : 1. அந்தப் பகுதிகள் இறுகும் வரை ட்ரே விளிம்பு ஆதாரமாக இருக்கும். 2. வீட்டிற்கு, சற்றுப் பெரிய முற்றம் கிடைக்கும்).
இப்படியே மீதி இரண்டு பக்கங்களையும் கவனமாக ஒட்டிக் கொள்ளவும். சிறிது நேரம் அசைய விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டும். (எப்பொழுதும் பேக்கிங் பேப்பருடன் ஒட்டியிராத பக்கங்கள் வெளியே தெரியுமாறு வைக்கவும்).
படத்தில் காட்டியுள்ள பகுதிகளில் ஐஸிங் வைக்கவும். (கட்டாயம் பைப்பிங் தான் செய்ய வேண்டும். கத்தியால், கரண்டியால் தடவப் போனால் வீடு ஆட்டம் காணும்).
பிறகு கூரைப் பகுதியை ஒட்டிக் கொள்ளவும். இதே போல் மறுபக்க கூரையையும் ஐஸிங் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
மறுபக்கக் கூரைத் தகட்டை ஒட்டியானதும், முகடு வரும் இடத்தில் ஐஸிங் வைத்து நிரப்பவும்.
சாக்லெட் ஃபிங்கர்ஸ் இரண்டை ஓரங்களில் ஒட்டிவிட்டு நடுவிலுள்ள இடைவெளிக்கு அளவாக இன்னொன்றைக் கத்தியால் வெட்டி ஒட்டவும்.
வீட்டின் அமைப்பு தயார். இனி அலங்கரிக்க வேண்டியது தான்.

முதல் பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30265"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 1 </a>

இரண்டாவது பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30266"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 2 </a>

கடைசி பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30268"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 4 </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்