மார்பக காம்பில் புண்கள்

தோழிகளுக்கு வணக்கம். எனக்கு 8 மாத பெண் குழந்தை இருக்கிறாள். அவளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறேன். அவளின் 2 வயது வரை அவளுக்கு தாய்ப்பால் கொடுக்க ஆசைப்படுகிறேன். ஆனால் பிரச்சினை என்னவெனில் என் மகளுக்கு தற்போது 3 பற்கள் முளைத்துள்ளது. அவள் பால் குடிக்கும் போது எல்லாம் மார்பக காம்பை கடித்து வைத்துவிடுகிறாள். இதனால் மார்பக காம்பில் புண்ணாகி அதிக வலியாக உள்ளது. அவளுக்கு பால் கொடுக்கவும் ரொம்ப கஷ்டப்படுகிறேன். இப்புண்கள் எளிதில் ஆறவும், என் பிரச்சினை தீரவும் வழி கூறுங்கள்....

உடம்பில் எங்கே புண் இருந்தாலும் ஓமியோபதியில் "ஆர்னிகா" என்ற மருந்து
மிக‌ அருமையாக‌ குணப்படுத்தும். ஓமியோபதி மருந்து கடைகளில் மட்டுமே
இது கிடைக்கும். "ஆர்னிகா" 30 அல்லது 200 என்று 15 நாள்களுக்கு என்று
கேட்டு வாங்குங்கள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை இரண்டு மாத்திரை போதும்.இரண்டு நாளிலேயே சரியாகி விடும். தேவையானால் மேலும் இரண்டு
நாள்கள் சாப்பிடலாம். குணமாகும் வரை காப்பி, டீ , மசாலா வேண்டாம்.
நீங்கள் வேண்டுமானால் ஓமியோபதி வெப் சைட் போய்ப்பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்