வெள்ளை பணியாரம்

தேதி: January 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

திருமதி. மீனாள் கிருஷ்ணன் அவர்களின் வெள்ளை பணியாரம் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய மீனாள் அவர்களுக்கு நன்றிகள்.

 

பச்சரிசி - ஒரு கப்
உளுத்தம் பருப்பு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

பச்சரியை தலை தட்டி ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ளவும். அதன் மேல் உளுத்தம் பருப்பைக் கோபுரம் போல் குவியலாக அளந்தெடுக்கவும். அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் சிறிது உப்பு போட்டு நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்தெடுத்த மாவு மிகவும் நீர்க்கவும் இல்லாமல், கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெயில் விட்டு காய்ந்ததும், மாவை ஒரு குழிக்கரண்டியால் சிறிது சிறிதாக எடுத்து ஊற்றி வேகவிடவும். வெந்ததும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான வெள்ளை பணியாரம் தயார்.

பணியாரம் கருகிவிடக் கூடாது. வெள்ளையாகவே தான் இருக்க வேண்டும். இது செட்டிநாட்டு ஸ்பெஷல் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெற்றுள்ள‌ தோxஇ சுவாவிறிக்கு எனது மனம் நிறைந்த‌ வாழ்த்துக்கள். எல்லாக் குறிப்புகளும் சூப்பருங்கோ. வெள்ளை பணியாரம் சும்மா பளீர்ன்னு படங்காட்டுது. வாழ்த்துக்கள் சுவா..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வாழ்த்துக்கள்..
அனைத்தும் அருமை.

என்றும் அன்புடன்,
கவிதா

மிக‌ மிக‌ தாமதமாக‌ இந்த‌ குறிப்பினை கண்டேன். லேட் பதிவிற்கு என்னை மன்னிக்கவும்.
எனது வெள்ளை பணியாரம் குறிப்பினை மிக‌ அழகாக‌ செய்து காட்டியிருக்கீங்க‌. சூப்பர் சுவா. உங்களுக்கு பிடித்ததா?வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

சுமி ரொம்ப நன்றிப்பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கவி மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மீனா சூப்பரான குறிப்பை கொடுத்த உங்களுக்கு நான்ந்தான் நன்றி சொல்லனும் செம சூப்பர் எங்களுக்கு ரொம்ப பிடிச்சுது காரச்சட்னியோடு சாப்பிட ஆஹா........ ரொம்ப நாளா இந்த வெள்ளை பணியாரம் செய்யனும்னு நினைச்சேன் ரோஜா படத்துல கூட கேப்பாருல்ல காரைக்குடி பணியாரம் செய்து தருவாயான்னு ;)
அப்பாடா நானும் செய்து சுவைத்திட்டேன் :)))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.