தேதி: January 3, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மாவுக்கு:
மைதா மாவு - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - ஒரு மேசைக்கரண்டி
லேயருக்கு:
அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
நெய் - ஒரு மேசைக்கரண்டி
பொடிக்க:
சர்க்கரை - 10 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
மைதா மாவில் நெய்யை உருக்கி ஊற்றி, உப்பு சேர்த்து விரல்களால் பிரட்டிக் கொள்ளவும்.

அத்துடன் தேவையான அளவு நீர் விட்டு பூரி மாவு பதத்தில் பிசைந்து, சிறிது நேரம் மூடி வைக்கவும்.

சர்க்கரை மற்றும் ஏலக்காயை மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.

லேயர் பிரிக்க: அரிசி மாவில் நெய்யை உருக்கி ஊற்றி கலந்து தயாராக வைக்கவும். (மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது).

பிசைந்து வைத்துள்ள மாவை ஒரே அளவிலான 6 உருண்டைகளாகப் பிரிக்கவும்.

உருட்டிய உருண்டைகளை மெல்லிய ரொட்டியாக திரட்டி வைக்கவும்.

அதில் ஒரு ரொட்டியின் மேல் அரிசி மாவுக் கலவையைத் தடவவும்.

அதன் மேல் அடுத்த ரொட்டியை வைத்து அதன் மேலும் அரிசி மாவுக் கலவையைத் தடவிக் கொள்ளவும். இதே போல அடுக்கடுக்காக அடுக்கி முடிக்கவும். (3 முதல் 6 வரை அடுக்கலாம். கடைசி ரொட்டி மேல் அரிசி மாவுக் கலவை தேய்க்க வேண்டாம்).

பிறகு அடுக்கிய அனைத்தையும் சேர்த்து அழுத்தம் கொடுக்காமல் ரோல் செய்து, முக்கால் இன்ச் அளவுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

நறுக்கிய துண்டுகளை சற்று தடிமனான பூரி போலத் திரட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து, பூரி போல் திரட்டி வைத்துள்ளவற்றைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

சூடு ஆறுவதற்கு முன்பு பொடித்த சர்க்கரையை இரண்டு பக்கங்களிலும் தூவவும்.

ஆறிய பிறகு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 10 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

இதை சர்க்கரைப் பாகில் போட்டும் சாப்பிடலாம்.
பாகு செய்வதற்கு : பாத்திரத்தில் அரை கப் சர்க்கரையைப் போட்டு, அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து காய்ச்சவும். ஒரு கம்பி பதம் வந்ததும் கால் தேக்கரண்டி ஏலக்காய்த் தூள் போட்டு கலந்து வைக்கவும்.
பொரித்தெடுத்த சிரோட்டியை சூடாக இருக்கும் போதே சர்க்கரைப் பாகில் போட்டு ஊற விட்டு எடுத்துப் பரிமாறலாம்.
Comments
நாந்தான் பர்ஸ்ட். எனக்குதான்
நாந்தான் பர்ஸ்ட். எனக்குதான் எல்லாமே. சூப்பர் வனி
Be simple be sample
சிரோட்டி
சூப்பர் ரெசிப்பி. எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. செய்முறையும் ஈசியா இருக்கு. நானும் செய்துட்டு படங்காட்டறேன்..:) வாழ்த்துக்கள்.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
வனி அக்கா
சூப்பரப்பு. எனக்கும் ஒரு பார்சல் ப்ளீஸ்.
எல்லாம் சில காலம்.....
Vanitha sis
சிரோட்டி எளிமையாக இருக்குது. இன்று முயற்சி செய்கிறேன். நன்றி.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
சிரோட்டி
மிக்க நன்றி மக்களே.... :) ரேவ்ஸ், சுமி, பாலா, மெர்சி... அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கப்பா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani sister
Enaku oru doubt nenka poori thiratama antha roll shape la fry panalama LA .na ethuku ipudi kekuraena intha roll shape oru sweet iruku antha sweet name ennanu theriyuthu so athu ithuva irukalam.....OK,easy recipe iruku so kandipa seitutu soluraen sister.intha sweet partha ippovey sapudunanm pola thonuthu...
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.