ஆல்மண்ட் பெப்பர் சிக்கன் கிரேவி

தேதி: January 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
பட்டை - ஒண்று
லவங்கம் - 2
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - காரத்திற்கேற்ப
மல்லித் தூள் - ஒரு தேக்கரண்டி
சிக்கன் மசாலா - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவ
எண்ணெய் - தேவையான அளவ
மிளகுத் தூள் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை - பாதி
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
ஆல்மண்ட் (பாதாம் பருப்பு) - 10
சோம்பு - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கனைச் சுத்தம் செய்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் பட்டை, லவங்கம், சோம்பு தாளித்து, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு சிக்கனைச் சேர்த்து நன்றாக வதக்கவும். சிக்கன் வதங்கும் போது உப்பு, மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, மல்லித் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி. மூடி வைத்து 2 (அ) 3 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.
அதன் பிறகு அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும் .
வெந்த சிக்கன் கலவையை வேறு பாத்திரத்திற்கு மாற்றி, அதனுடன் அரைத்தவற்றைச் சேர்த்து கறிவேப்பிலை போட்டு 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்ததும் மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
சுவையான ஆல்மண்ட் பெப்பர் சிக்கன் கிரேவி தயார். சப்பாத்தி, பரோட்டா, தோசை ஆகியவற்றுக்கு நல்ல சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் கிரேவி சூப்பரா இருக்கு. இன்னிக்கு சனி கிழமையா இருக்கு. நான் நாளைக்கு டேஸ்ட் செய்து பார்க்கிறேன்.

எல்லாம் சில‌ காலம்.....

நல்லா இருக்குங்க குறிப்பும் படமும்... அவசியம் செய்து பார்கணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப தாங்ஸ்ங்க வாணி

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Thanks balanayaki . செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela