தேதி: January 5, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. ரஸியா அவர்கள் வழங்கியுள்ள இறால் பஜ்ஜி என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரஸியா அவர்களுக்கு நன்றிகள்.
இறால் (பெரியது) - 500 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
கேசரி பவுடர் (மஞ்சள் நிறம்) - சிறிது (விரும்பினால்)
நசுக்கிய பூண்டு - 8 பற்கள்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ரீஃபைண்டு ஆயில் - பொரிப்பதற்கு
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் சோள மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

சலித்த மாவுடன் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து 2 மணி நேரம் புளிக்கவிடவும்.

இறாலின் தோலை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் பூண்டை நசுக்கிப் போடவும்.

அத்துடன் கேசரி பவுடர், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, இறாலை மைதா மாவுக் கரைசலில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.

சுவையான இறால் பஜ்ஜி ரெடி. இதை சில்லி சாஸ் அல்லது மீன் சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சாஸ் எதுவுமில்லாமலும் சாப்பிடலாம்.

இது வியட்நாம் பஜ்ஜி. எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் சிற்றுண்டி.
Comments
இறால்
வாவ்.. சூப்பர். அப்படியே சாப்பிடுவேன் அந்த இறால் பஜ்ஜியை..:) கலக்கல் ரெசிப்பி. கடைசி படம் அழகு.இங்க எனக்கு தட்டுபாடு இல்லாம கிடைக்கும் அயிட்டம் இறால் தான், இனி இறால் வாங்குனா இந்த ரெசிப்பி தான். வாழ்த்துக்கள் ரேவ்ஸ்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....