சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி

தேதி: January 5, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆமினா அவர்களின் சன்னா தால் ஸ்டப்டு சப்பாத்தி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்.

 

கடலைப்பருப்பு - 50 கிராம்
கோதுமை மாவு - ஒரு கப்
நெய் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
சோடா உப்பு - சிறிதளவு


 

கோதுமை மாவுடன் உப்பு, சோடா உப்பு மற்றும் நெய் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றிப் பிசைந்து காற்று புகாத டப்பாவில் போட்டு அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
குக்கரில் கடலைப்பருப்புடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், சீரகம் மற்றும் மிளகு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
வெந்ததும் குக்கரைத் திறந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி ஆறவிடவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும். கலவை நன்கு கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவைச் சிறு உருண்டையாக எடுத்து வட்டமாகத் தேய்த்து, அதன் நடுவில் சிறிதளவு கடலைப்பருப்புக் கலவையை வைத்து மூடி உருண்டையாக உருட்டி வைக்கவும்.
உருட்டிய உருண்டைகளை சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும். அடுப்பில் தவாவை வைத்து சப்பாத்தியைப் போட்டுச் சுட்டெடுக்கவும்.
டேஸ்டி சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி வித்தியாசமா இருக்கு. இங்க‌ நைட் எப்போதும் சப்பாத்தி தான், இனி வாரத்தில் ஒரு நாள் இப்படி ட்ரை செய்திட‌ வேண்டியது தான். சூப்பரான‌ ரெசிப்பிக்கு என் வாழ்த்துக்கள்மா கண்ணு..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சன்னா தால் ஸ்டஃப்டு சப்பாத்தி புதுசா இருக்கேம், இந்த‌ வாரம் எங்க‌ வீட்டில் செய்திட‌ வேண்டியதுதான்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Chappathi ippa seithen. Side dish coconut chutney seithen. Enoda husband chappathi super ah irukku coconut chutney set agalanu sollitar.. Intha chappathiku side dish ethu nalla irukkunu sollunga pls....