தேதி: January 5, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆமினா அவர்களின் வெங்காய உதிரி பக்கோடா குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்.
வெங்காயம் - 100 கிராம்
கடலை மாவு - 50 கிராம்
பச்சரிசி மாவு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
சோடா உப்பு - சிறிதளவு
மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாட்டில் மெல்லியதாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, உப்பு, சோடா உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, அதிகமாக தண்ணீர் விடாமல் கெட்டியாகக் கலந்து கொள்ளவும்.

அதனுடன் வெங்காயத்தைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயக் கலவையை எடுத்து சிறிது சிறிதாக உதிர்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.

எளிதாகச் செய்துவிடக் கூடிய, சூடான, சுவையான வெங்காய உதிரி பக்கோடா ரெடி.

மாலை வேளை ஸ்நாக்காகவும், துரித உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாகவும் சாப்பிட நன்றாக இருக்கும்.
Comments
ரேவ்
ரேவ் கிச்சன் குயின் மீண்டும் ஆனதுக்கு வாழ்த்துக்கள் . சூப்பரா இருக்கு பக்கோடா. வெரி சிம்பிள்
Be simple be sample
ரேவதி
மீண்டும் கிச்சன் குயின் பட்டம் பெற்றுள்ள என் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள். எல்லா குறிப்பும் அருமை. வெங்காய உதிரி பக்கோடா சூப்பரா இருக்கு, ஒரு பிளேட் பார்சல்..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
பக்கோடா
பக்கோடா கலக்கலா இருக்குது ரேவதி சிஸ். எல்லா குறிப்புகளுமே அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
ரேவ்'ஸ்
கலக்கலா இருக்கு. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.
எல்லாம் சில காலம்.....
Hi rev
Today I tried your onion pakkoda... it's very yummy. ..