தேதி: January 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. தேவா அவர்களின் தாய்லாந்து சிக்கன் கறி என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய தேவா அவர்களுக்கு நன்றிகள்.
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
தேங்காய்ப் பால் - ஒரு கப்
துன்னுத்திப் பச்சை இலை (Basil Leaves) - 6
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
வறுத்துப் பொடித்த காய்ந்த மிளகாய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
ஃபிஷ் சாஸ் - ஒரு தேக்கரண்டி








லெமன் கிராஸ் கிடைத்தால் சிறு துண்டுகளாக வெட்டி பூண்டு வதக்கும் போது சேர்த்து வதக்க வேண்டும். கிடைக்காவிடில் 5 எலுமிச்சை இலைகளை சேர்க்கலாம்.
தாய்லாந்து உணவு வகைகளுக்கு வாசனைக்கு சேர்க்கப்படுவது லெமன் கிராஸ் மற்றும் காலங்கால் (இஞ்சியில் ஒரு வகை).
ஃபிஷ் சாஸ் (Fish Sauce) சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்.
தாய்லாந்து உணவு வகைகள் அனைத்தும் புளிப்பு, காரம் மற்றும் மணம் நிறைந்தது. இந்த உணவுகளின் சுவை அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
Comments
தர்ஷா
பார்க்கற அப்பவே சூப்பரா இருக்கு. இந்த வாரம் ட்ரை பண்றேன். சூப்பரா செய்து இருக்கீங்க எல்லாமே. வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.
எல்லாம் சில காலம்.....