சிக்கன் மஞ்சூரியன்

தேதி: January 26, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோழி - கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
சோளமாவு - 4 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
முட்டை - ஒன்று
மைதா மாவு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - சுமார் 250 மில்லி
உப்பு - ஒரு ஸ்பூன்

கிரேவி செய்வதற்கு :
பூண்டு பல் - 15
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை குடைமிளகாய் - ஒன்று
சிக்கன் (மேக்கி) க்யூப் - கால் க்யூப்
தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
சிகப்பு மிளகாய் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு ஸ்பூன்
வெங்காயத்தாள் அல்லது மல்லிக்கீரை - சிறிது
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்


 

முதலில் கோழிக்கறியில் எலும்புகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
முட்டையை கலக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு, சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி, நறுக்கி வைத்துள்ள கோழிக்கறியை அதில் பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு அவற்றை பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
விருப்பத்திற்கேற்ப வெங்காயத்தாளையோ அல்லது மல்லிக்கீரையையோ பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், மேக்கி க்யூப் அனைத்தையும் போட்டு கிளறவும்.
சோளமாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக் கொண்டு கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிக்கறியையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது மல்லிக்கீரையை அதில் போட்டு 2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும்.
பிறகு எலுமிச்சைச்சாறு சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

கோபி மஞ்சூரியன் என்று தலைப்பு கொடுத்து, கோபியை குறிப்பில் சேர்க்கவில்லையே? மறந்து விட்டீர்களா?

மன்னிக்கவும். அது சிக்கன் மஞ்சூரியன் என்று இருக்க வேண்டும். தவறுதலாக கொடுக்கப்பட்டுவிட்டது. தற்போது மாற்றியமைத்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

சிக்கன் (மேக்கி) க்யூப் - 1/4 க்யூப்
endraal enna?

sajuna

சிக்கன் க்யூப் என்பது கோழிக்கறி மற்றும் வெங்காயம், சோளம் போன்ற சில வெஜிடபிள் வகைகளை பதப்படுத்தி அதனுடன் அஜினோமோட்டோ, மசாலாக்கள், ஆயில் கலந்து கட்டிகளாக "மேக்கி", "ஜம்போ" மற்றும் பல மார்க் க்யூப்கள் விற்கப்படுகின்றன. இதில் கோழிக்கு பதில் பீஃப், இரால், ஆடு, வெஜிடபிள் இப்படி பலவும் சேர்க்கப்படுகிறது. "ஹலால்" முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்கவேண்டும். சூப், கஞ்சி, ஃப்ரைட் ரைஸ், சில கிரேவி வகைகள் போன்றவற்றுக்கு இது ஸ்பெஷல் சுவை கொடுக்கும். அதிகமாக சேர்க்காமல் சமைக்கும் சாப்பாட்டின் அளவுக்கு தகுந்தாற்போல் சேர்த்துக்கொள்ளலாம். இந்த விளக்கம் போதுமா? இன்னும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்!

ஹலால் கடைகளில் கேட்டு பார்க்கிறேன்.நன்றி.

sajuna

ஹாய் அஸ்மா சலாம்...ஆமா எனக்கு இந்த குயூபில் ஒரே குழப்பம்தான் சரி மேகி கியூப் எப்படி ஹலால்தானே?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு மர்லியா! அஸ்ஸலாமு அலைக்கும்! நலமா? ஸாரிபா, உடன் பதில் போட முடியல!சிக்கன், மட்டன் ஸ்டோக்குகளில் ஹலால் முத்திரை இருந்தால், அது கன்ஃபார்ம் பண்ணப்பட்ட சொஸைட்டியின் முத்திரை என்று தெரிந்தால் அது ஹலால்தான். இங்கு, சில ஸ்டோக்குகள் (க்யூப்கள்) ஃபிரான்ஸிலேயே தயாரானதாக இருக்கும். ஹலால் என்று போட்டிருக்கும். ஆனால், அதே கம்பெனி பன்றி இறைச்சியை கூட தயார் பண்ணி விற்பார்கள். அப்படிப்பட்ட கம்பெனிகள் போடும் ஹலால் மார்க்கை நம்பக்கூடாது. வியாபார யுக்திக்காக போடும் ஹலால் அது! நாங்கள் அதெல்லாம் வாங்கமாட்டோம். இங்கு நன்கு தெரிந்த ஹலால் மார்க்குகளையே வாங்குவோம். மற்றபடி உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க மர்லியா! அவசர பதில். பிறகு பேசுகிறேன்.

வஸ்ஸலாம் அஸ்மா நலமே நீங்கள்?என்ன ஓர் போக ரெடி ஆகியாச்சா?அய்யோ அப்ப மேகி கியூப்?பார்கனும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு