தேதி: January 8, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ராணி அவர்களின் கருணைக்கிழங்கு பக்கோடா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ராணி அவர்களுக்கு நன்றிகள்.
கருணைக்கிழங்கு - அரை கிலோ
கடலை மாவு - அரை கிலோ
அரிசி மாவு - அரை கிலோ
மிளகாய்த் தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கிலோ
கருணைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு அங்குல நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

கரைத்த மாவுக் கரைசலில் நறுக்கிய கருணைக்கிழங்கைப் போட்டுப் பிரட்டவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவில் பிரட்டி வைத்துள்ள கருணைக்கிழங்கு கலவையை எடுத்து எண்ணெயில் உதிர்த்துப் போட்டு பொரிக்கவும். கிழங்கு நன்கு பொரிந்து வந்ததும் எண்ணெயை வடித்து எடுக்கவும்.

சுவையான கருணைக்கிழங்கு பக்கோடா ரெடி. விருப்பப்பட்டால் கறிவேப்பிலையைப் பொரித்து போடலாம்.

Comments
hema
Manamaarndha vaazthukkal :) indha recipe enaku romba pidichirukku. Try panraen.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Hema sis
பக்கோடா நல்லாருக்கு சிஸ். வாழ்த்துக்கள்.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!