தேதி: January 8, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. நர்மதா அவர்கள் வழங்கியுள்ள கஸ்டர்ட் அப்பிள் புடிங் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய நர்மதா அவர்களுக்கு நன்றிகள்.
ஆப்பிள் - 2
கன்டண்ஸ்ட் மில்க் - அரை டின்
சீனி - ஒரு மேசைக்கரண்டி
பால் பவுடர் - 3 மேசைக்கரண்டி
கஸ்டர்ட் பவுடர் - 4 மேசைக்கரண்டி
முந்திரி - சிறிது
திராட்சை - சிறிது
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

ஆப்பிளைச் சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் போட்டு, அதனுடன் முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கன்டண்ஸ்ட் மில்க்குடன், கஸ்டர்ட் பவுடர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

கஸ்டர்ட் கலவையை நறுக்கிய ஆப்பிளுடன் சேர்த்து, அதனுடன் பால் பவுடர் மற்றும் சீனி சேர்க்கவும்.

இந்தக் கலவையை சிறிய கிண்ணங்களில் ஊற்றி, ஆவியில் வைத்து 10- 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

கலவை வெந்ததும் எடுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் ஃபிரீசரில் வைத்து குளிரூட்டவும்.

சுவையான கஸ்டர்டு ஆப்பிள் புட்டிங் தயார். தேவையான போது எடுத்து மீண்டும் கரண்டியால் கடைந்துவிட்டு கிண்ணங்களில் போட்டு பரிமாறவும்.

Comments
kitchan queen
வாழ்த்துக்கள் ஹேமா . எல்லாமே வித்தியாசமான குறிப்புகள். சூப்பரா இருக்கு.
Be simple be sample
புடிங்
ஹேமா... சூப்பரா இருக்கு புடிங்.
- இமா க்றிஸ்
புட்டிங்
ஆப்பிள் புட்டிங் அருமை.
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
ஹேமா
ஆப்பிள் புட்டிங் குறிப்பு,சூப்பர்.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.