கருப்பட்டி இட்லி & தோசை

தேதி: January 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வி. கலைவாணி அவர்களின் கருப்பட்டி இட்லி என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கலைவாணி அவர்களுக்கு நன்றிகள்.

 

இட்லி மாவு - 250 மில்லி
கருப்பட்டி - 150 கிராம்
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு
பாசிப்பருப்பு‍‍‍‍‍ - 3 தேக்கரண்டி
உப்பு - சிறிது


 

தேவவையானவற்றைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கருப்பட்டியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். (தண்ணீர் அதிகமாக‌ இருந்தால் மாவு நீர்த்துவிடும்).
காய்ச்சிய பாகை இலேசான சூடாகவோ அல்லது ஆற வைத்தோ வடிகட்டி இட்லி மாவுடன் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து கலந்து, இட்லிகளாக ஊற்றவும். மேலே வறுத்த‌ பாசிப்பருப்பு மற்றும் தேங்காய்த் துருவலைத் தூவி, மூடி வைத்து வேக‌விட்டு எடுக்கவும்.
தோசைக்கல்லில் நெய் விட்டு இதே மாவை தோசையாக ஊற்றி, வறுத்த‌ பாசிப்பருப்பு மற்றும் தேங்காய்த் துருவலைத் தூவி வேக வைத்து எடுக்கவும்.
மாவை நீர்க்க‌ கரைத்து ஆப்பமாகவும் ஊற்றலாம்.
சுவையான‌ கருப்பட்டி இட்லி, தோசை & ஆப்பம் தயார்.

விருப்பத்திற்கேற்ப இனிப்பைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். கருப்பட்டியின் அளவைக் குறைத்துவிட்டு, சிறிதளவு சீனியும் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குட்டீஸ்க்கு பிடிக்கும், ஆரோக்கியமும் கூட. :) கருப்பட்டி கிடைச்சா செய்து பார்க்கணும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிச்சன் குயினுக்கு வாழ்த்துக்கள். குறிப்பு எல்லாம் டாப் டக்கரா இருக்கு. கருப்பட்டி இட்லி சூப்பர்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

கருப்பட்டி கிடைக்கலனா வெல்லம் சேர்த்து கூட‌ செய்யலாம். ரொம்ப‌ நல்லா இருக்கும்.

எல்லாம் சில‌ காலம்.....

மனமார்ந்த‌ நன்றிகள் சுமி.

எல்லாம் சில‌ காலம்.....