சோயா சோலே

தேதி: January 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. செந்தமிழ்ச் செல்வி அவர்களின் சோயா சோலே குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய செந்தமிழ்ச் செல்வி அவர்களுக்கு நன்றிகள்.

 

உருண்டைக்கு:
வெள்ளை சோயா - அரை கப்
உளுத்தம் பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பற்கள்
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
குழம்புக்கு:
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - சிறிது
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்த‌மல்லித் தழை
அரைக்க:
தேங்காய் - தேவையான அளவு
முந்திரி ‍- 3
தாளிக்க:
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

வெள்ளை சோயா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயுடன் முந்திரியைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
அரைத்தவற்றுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து, சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வெந்து குழைந்ததும் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிய வதங்கியதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் உருண்டைகளைப் போடவும்
நன்றாகக் கொதித்ததும் தேங்காய், முந்திரி விழுதைச் சேர்க்கவும்.
குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும் கொத்த‌மல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான‌ சோயா சோலே தயார்.

முந்திரி சேர்க்க விரும்பாதவர்கள் தேங்காய் மட்டும் அரைத்துச் சேர்க்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

Ennoda twins kuttiesku 1 1/2 yrs aaguthu. Innum sipper(soopi) maraka matengranga. Atha eppdi maraka vaika. Neem oil thadavium kuduthuten. Romba aluranga. Pls help me.....