இறால் பக்கோடா

தேதி: January 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஆர். பூங்கொடி அவர்களின் இறால் பக்கோடா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பூங்கொடி அவர்களுக்கு நன்றிகள்.

 

இறால் - 200 கிராம்
எண்ணெய் - 200 மில்லி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - சிறிதளவு
சோம்புத் தூள் - சிறிதளவு
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - ஒன்று
கேசரி பவுடர் - சிறிதளவு (விருப்பப்பட்டால்)
ரவை - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு


 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு, சோம்புத் தூள், ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய், சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். (ரவை மொறுமொறுப்புக்காக‌வும், எண்ணெய் பொரிக்கும் போது எண்ணெய் குடிக்காமல் இருக்க‌வும் சேர்க்கிறோம்).
பிசைந்தவற்றுடன் சுத்தம் செய்த இறாலைப் போட்டு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து உதிர்ந்து விழும் பக்குவத்தில் பிசைந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, பிசைந்து வைத்துள்ள இறால் கலவையை உதிர்த்துப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சுவையான இறால் பக்கோடா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Manam niraindha vaazthukkal :) sama super pakoda. Mugappu coloufula irukkunga. Kalakaringa.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இறால் பக்கோடா சூப்பர்... கிரிஷ்பியா இருக்கு... விரைவில் செய்து பார்க்கிறேன்.

"எல்லாம் நன்மைக்கே"

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி அக்கா. டேஸ்டும் ரொம்ப‌ நல்லா இருந்துச்சி. ரவை சேர்த்ததால‌ கிரிஸ்பியா இருந்துச்சி. தேங்க் யூ சோ மச்.

எல்லாம் சில‌ காலம்.....

மனமார்ந்த‌ நன்றிகள் பாக்கியா.

எல்லாம் சில‌ காலம்.....