மீன் கட்லெட்

தேதி: January 9, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

சதையுள்ள மீன் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பற்கள்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
புதினா - அரை கைப்பிடி அளவு
பெரிய வெங்காயம் - 2
பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மைதா - 3 தேக்கரண்டி
ப்ரெட் தூள் - 100 கிராம்


 

மீனைக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேக‌ வைக்கவும். (மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக‌ வைப்பதால் மீனின் வாடை நீங்கிவிடும்). வேக வைத்த மீனின் முள்ளை நீக்கிவிட்டு, உதிர்த்து வைக்கவும். உருளைக்கிழங்கை வேக‌ வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தழை, புதினா சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ம‌சாலாவாக அரைத்துக் கொள்ளவும்.
உதிர்த்த‌ மீனுடன் வதக்கி அரைத்த மசாலா மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக‌ப் பிசைந்து கொள்ளவும். (கலவை கெட்டியாக இல்லையென்றால் ப்ரெட்டில் உள்ள ஓரங்களை நீக்கிவிட்டு நடுப்பகுதியைப் போட்டு பிசைந்து கொள்ளவும்).
ஒரு பாத்திரத்தில் மைதாவைப் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். ப்ரெட் தூளை ஒரு தட்டில் பரவலாக போட்டு வைக்கவும். பிசைந்த மீன் கலவையை வடையாக தட்டி, மைதா கரைசலில் தோய்த்தெடுத்து, ப்ரெட் தூளில் பிரட்டிக் கொள்ளவும்.
பிறகு அவற்றை சூடான எண்ணெயில் போட்டுப் சிவக்க பொரித்து எடுக்கவும்.
அல்லது தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.
சுவையான‌ மீன் கட்லெட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீன் கட்லெட் பார்க்கவே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..

குறிப்பை வெளியிட்ட‌ அட்மினுக்கு மனமார்ந்த‌ நன்றிகள்.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றிகள் தர்ஷா. டேஸ்டும் நல்லாவே இருந்துச்சி. வீட்ல‌ ஒரே பாரட்டு மழை.

எல்லாம் சில‌ காலம்.....

மீன் கட்லட் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

அன்புடன்
பாரதி வெங்கட்

போன வாரம் மீன் கட்லட் செய்தேன். அருமையான சுவை. என் மகளும் விரும்பி உண்டாள். நன்றி:)

நன்றி. செய்தீர்களா? என் வீட்டில் நல்ல பாராட்டு கிடைத்தது.

எல்லாம் சில‌ காலம்.....

நன்றி வானி. என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்திருந்தது. அருசுவையில் இது போல் பல‌ சுவையான‌ குறிப்புகள் படம் இல்லாமல் லைக் அல்லாமல் கிடக்கிறது.

எல்லாம் சில‌ காலம்.....

ஹாய் பால்'ஸ் ,
மீன் கட்லெட் செய்தேன். சுவை சூப்பர். ஃப்ர்ஸ்ட் டைம்ல்யே நல்லா வந்தது.
ஒரு டவுட் உள்ளேயும் கிரிஸ்பியா இருக்குமா? இல்ல‌ லேயர் மட்டுமா? சிம்ல‌ வைத்து தான் செய்தென்.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!