டூட்டி ஃப்ரூட்டி கேக்

தேதி: January 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா மாவு - ஒன்றரை கப்
சர்க்கரை - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப்
டூட்டி ஃப்ரூட்டி (Tutti Frutti) - ஒரு கப்


 

ஒரு பவுலில் டூட்டி ஃப்ரூட்டி மற்றும் 2 தேக்கரண்டி மைதா மாவைப் போட்டுக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பவுலில் தயிருடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும். பிறகு அதனை 2 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
2 நிமிடங்கள் கழித்து அத்துடன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு, அரை கப் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் மைதா மாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
மைதா மாவு நன்றாகக் கலந்த பிறகு டூட்டி ஃப்ரூட்டியைச் சேர்த்துக் கலக்கவும். அனைத்தும் நன்றாக கலந்ததும், அவனை 300 டிகிரி முற்சூடு செய்யவும்.
பிறகு கேக் பேனில் வெண்ணெய் தடவி, லேசாக மைதா மாவைத் தூவி, அதில் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, அவனில் வைத்து 200 டிகிரியில் 30 நிமிடங்கள் வைக்கவும். பிறகு டூத் பிக்கைக் கொண்டு கேக்கில் இரண்டு மூன்று இடங்களில் குற்றி பார்த்து, ஒட்டாமல் வந்ததும் எடுக்கவும்.
சாஃப்ட் & டேஸ்டி டூட்டி ஃப்ரூட்டி கேக் ரெடி. விருப்பமான அளவில் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ரேவ். எனக்கும் ஒரு துண்டு கேக்.

Be simple be sample

கேக் சூப்பர் .

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.